மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 26 ஆக 2021

திருச்செந்தூர்: பக்தர்களுக்கு 10 நாட்களுக்கு தடை!

திருச்செந்தூர்: பக்தர்களுக்கு 10 நாட்களுக்கு தடை!

திருச்செந்தூர் முருகன் கோயிலில் நாளைமுதல் செப்டம்பர் 5 ஆம் தேதிவரை பக்தர்களுக்கு அனுமதியில்லை என தூத்துக்குடி ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.

புகழ்பெற்ற திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் நடைபெறக் கூடிய முக்கிய விழாக்களில் ஒன்றான ஆவணித் திருவிழா நாளை காலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. தொடர்ந்து 12 நாட்கள் திருவிழா நிகழ்ச்சிகள் நடைபெறும்.

முக்கிய நிகழ்ச்சிகளான 31ஆம் தேதி 5ம் திருநாளில் குடவருவாயல் தீபாராதனையும், செப்டம்பர் 2ஆம் தேதி 7ம் திருநாளில் சுவாமி சண்முகர் சிவப்பு சாத்தி கோலத்திலும், 3ஆம் தேதி 8ம் திருநாளில் பச்சை சாத்தி கோலத்திலும் எழுந்தருளும் நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

ஆவணி திருவிழாவில் பக்தர்கள் அதிக அளவில் கூட வாய்ப்புள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக செப்டம்பர் 5ஆம் தேதிவரை பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

கோயிலில் ஆவணி திருவிழா ஆகம விதிப்படி பக்தர்களின்றி நடைபெறும். ஆவணித் திருவிழா நிகழ்வுகளை வீட்டிலிருந்தே யூடியூப் வாயிலாகக் காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என தூத்துக்குடி ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.

மேலும், கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக வார இறுதி நாட்களான வெள்ளி, சனி,ஞாயிறு அன்று கோயில்களில் பக்தர்கள் வழிபாடு நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளதால் நாளை(ஆகஸ்ட் 27) வெள்ளிக்கிழமை நடைபெறும் கொடியேற்ற நிகழ்ச்சியில் பக்தர்கள் கலந்துகொள்ள அனுமதி இல்லை.

கொரோனா பரவலைத் தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நேற்று முன் தினம் தமிழ் அர்ச்சனை தொடக்கவிழா நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

-வினிதா

ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு 3 சதவிகிதம் உயரும் அகவிலைப்படி!

2 நிமிட வாசிப்பு

ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு 3 சதவிகிதம்  உயரும் அகவிலைப்படி!

போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகரங்கள்: முதலிடத்தில் எந்த நகரம்? ...

3 நிமிட வாசிப்பு

போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகரங்கள்: முதலிடத்தில் எந்த நகரம்?

கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு ரூ. 50,000 இழப்பீடு!

4 நிமிட வாசிப்பு

கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு ரூ. 50,000 இழப்பீடு!

வியாழன் 26 ஆக 2021