மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 26 ஆக 2021

பெற்றோரை இழந்த குழந்தைகள் படிப்புக்கு நிதி அளிக்க முடியுமா?

பெற்றோரை இழந்த குழந்தைகள் படிப்புக்கு நிதி அளிக்க முடியுமா?

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகள், அவர்கள் பயிலும் தனியார் பள்ளிகளிலேயே தொடர்ந்து படிக்க பி.எம்.கேர்ஸ் நிதியை அளிக்க முடியுமா? என்பது குறித்து ஒன்றிய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொரோனா தொற்றால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு பி.எம். கேர்ஸ் நிதியிலிருந்து, 10 லட்சம் ரூபாய் ஒதுக்கப்படும். அவர்களுக்கு, 18 வயதான பின், 23 வயது முடியும் வரை, உயர் கல்விக்கு உதவும்வகையில், இந்த தொகையிலிருந்து மாதந்தோறும் நிதியுதவி வழங்கப்படும். பின்பு, அவர்களுக்கு, 23 வயது முடிவடைந்தபின், 10 லட்சம் ரூபாய் மொத்தமாக கொடுக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்திருந்தார்.

கொரோனா தொற்றுநோய் காரணமாக பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு உணவு, தங்குமிடம் மற்றும் கல்வி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை வழங்குவது குறித்து உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து பதிவு செய்த வழக்கை நீதிபதிகள் நாகேஸ்வரர் தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது.

இதில் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் இன்று(ஆகஸ்ட் 26) பிரமாண பத்திரம் தாக்கல் செய்தது. அதில், ஏப்ரல் 1, 2020 முதல் ஆகஸ்ட் 23, 2021 வரை கொரோனா அல்லது பிற காரணங்களால் 101,032 குழந்தைகள் பெற்றோரை இழந்துள்ளனர்.

அதில், 8,161 குழந்தைகள் தாய், தந்தையை இழந்துள்ளனர், 396 குழந்தைகள் கைவிடப்பட்டுள்ளனர், 92,475 குழந்தைகள் தங்கள் பெற்றோரில் ஒருவரை இழந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குழந்தைகள் குறித்து அக்கறை கொள்ள வேண்டியுள்ளது. அவர்களால் கல்வியை தொடர முடியாது, அதனால் குழந்தை தொழிலாளராக மாற வாய்ப்புள்ளது என்று கூறிய நீதிபதிகள், குழந்தைகளை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது என்றனர்.

பெற்றோரை இழந்த குழந்தைகள், அவர்கள் பயிலும் தனியார் பள்ளிகளிலேயே தொடர்ந்து படிக்க பி.எம்.கேர்ஸ் நிதியை அளிக்க முடியுமா? பி.எம் கேர்ஸ் மூலம் பயன்பெறும் குழந்தைகள் யார்? தனியார் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளின் தொடர்ச்சியான கல்விக்கு உடனடியாக நிதி வழங்க முடியுமா? என்பது குறித்து ஒன்றிய அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.

-வினிதா

திருப்பதி: அனைத்து பக்தர்களுக்கும் இலவச தரிசன டோக்கன்கள்!

2 நிமிட வாசிப்பு

திருப்பதி: அனைத்து பக்தர்களுக்கும் இலவச தரிசன டோக்கன்கள்!

உரியவரிடம் சேர்ந்த ஓணம் பம்பர் பரிசு ரூ.12 கோடி!

6 நிமிட வாசிப்பு

உரியவரிடம் சேர்ந்த ஓணம் பம்பர் பரிசு ரூ.12 கோடி!

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

3 நிமிட வாசிப்பு

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

வியாழன் 26 ஆக 2021