மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 26 ஆக 2021

டெல்லி பல்கலையில் தமிழ் படைப்புகள் நீக்கம்: வலுக்கும் எதிர்ப்பு!

டெல்லி பல்கலையில் தமிழ் படைப்புகள் நீக்கம்: வலுக்கும் எதிர்ப்பு!

டெல்லி பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்திலிருந்து மகாஸ்வேதா தேவி, பாமா, சுகிர்தராணி ஆகிய தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள் நீக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை தருகிறது என்று மதுரை எம்.பி சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

டெல்லி பல்கலைக்கழகம் ஆங்கில இலக்கிய பாடத் திட்டத்திலிருந்து தமிழ் எழுத்தாளர்கள் மகாஸ்வேதாதேவியின் 'திரௌபதை' , பாமாவின் "சங்கதி', சுகிர்தராணியின் கைம்மாறு(மலம் அள்ளும் தொழிலாளர்கள் பற்றியது) மற்றும் என்னுடல்(பட்டியலின பெண்ணியம் பற்றியது) ஆகிய படைப்புகள் நீக்கப்பட்டிருக்கின்றன.

பல்கலைக்கழகத்தின் தேர்வுக்குழு ஆலோசனைக்கு பிறகு எழுத்தாளர்களின் கவனத்திற்கு செல்லாமல் இந்த பாடத்திட்டங்கள் நீக்கப்பட்டதாகவும், அதற்கு பதிலாக சுல்தானாவின் கனவுகள் மற்றும் ராமாபாயின் படைப்புகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதற்கு எழுத்தாளர்கள், அரசியல் தலைவர்கள் என பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இதுகுறித்து மதுரை எம்.பி சு.வெங்கடேசன் ட்விட்டரில், டெல்லி பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்திலிருந்து மகாஸ்வேதா தேவி, பாமா, சுகிர்தராணி ஆகியோரின் படைப்புகள் நீக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை தருகிறது. பொது சமூகத்தில் அழுத்தமான சலனங்களை தங்களது படைப்புகள் மூலம் ஏற்படுத்திய இவர்களின் படைப்புகள் மறுபடியும் சேர்க்கப்பட வேண்டும்'' என்று பதிவிட்டுள்ளார்.

இதுகுறித்து எழுத்தாளர் சுகிர்தராணி கூறுகையில், பாடத்திட்டத்திலிருந்து படைப்பு நீக்கப்பட்ட தகவலே செய்திகள் வாயிலாகத்தான் எனக்கு தெரியவந்தது. பல்கலைக்கழகத்திலிருந்து எந்தவித தகவலும் தெரிவிக்கவில்லை. ஒடுக்கப்பட்ட மக்களின் படைப்புகள் நீக்கப்பட்டிருப்பது எனக்கு அதிர்ச்சியை தரவில்லை. அது தொடர்ந்து நடப்பதுதான் அதிர்ச்சியாக இருக்கிறது.இதற்கு சாதிய பின்புலம்தான் காரணமாக இருக்கக் கூடும். ஒரு எழுத்தாளராக கண்டனத்தையும், எதிர்ப்பையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறினார்.

-வினிதா

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்! ...

2 நிமிட வாசிப்பு

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்!

இலங்கை கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது ஏன்?

5 நிமிட வாசிப்பு

இலங்கை  கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது ஏன்?

வியாழன் 26 ஆக 2021