மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 26 ஆக 2021

ரிலாக்ஸ் டைம்: தினை கேசரி!

ரிலாக்ஸ் டைம்: தினை கேசரி!

சிறுதானியங்களில் பல்வேறு ருசியான சத்தான ரெசிப்பிகளைச் செய்யலாம். அவற்றில் ஒன்று இந்த தினை கேசரி. விசேஷ நாட்களுக்கு மட்டுமல்ல; ரிலாக்ஸ் டைமுக்கும் ஏற்ற இந்த கேசரி, நாள் முழுக்க புத்துணர்ச்சி தரும்.

எப்படிச் செய்வது?

சிறிதளவு நெய்யில் தேவையான அளவு முந்திரிப்பருப்பு, திராட்சையை வறுத்துக்கொள்ளவும். ஒரு பங்கு தினைக்கு இரண்டு பங்கு என்கிற கணக்கில் தண்ணீரை எடுத்துக்கொள்ளவும். 200 கிராம் தினையுடன் தண்ணீரைச் சேர்த்து குக்கரில் இரண்டு விசில் வரும்வரை வேகவிடவும். ஒரு வாணலியைச் சூடாக்கி அதில் வெந்த தினையைச் சேர்க்கவும். அதனுடன் 200 கிராம் சர்க்கரை சேர்த்துக் கிளறவும். பின்னர் நெய்யைச் சிறிது சிறிதாகச் சேர்த்து, கலவை கெட்டியாகும்வரை கிளறவும். பின்னர் நெய்யில் வறுத்த முந்திரி திராட்சை, சிறிதளவு ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கிளறி, கலவை திரண்டு வந்ததும் இறக்கவும்.

சிறப்பு

இது நார்ச்சத்து நிறைந்த ஓர் உணவாகும். மலச்சிக்கல் நீங்கும். வயிறு, குடல், கணையம் போன்ற உறுப்புகளை வலுப்படுத்தும். அவற்றில் இருக்கும் புண்களை ஆற்றும். அனைத்து வயதினருக்கும் ஏற்றது.

தமிழகத்தின் ஓலா தொழிற்சாலையில் 10,000 பெண் ஊழியர்கள்!

5 நிமிட வாசிப்பு

தமிழகத்தின் ஓலா தொழிற்சாலையில் 10,000 பெண் ஊழியர்கள்!

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்த நான்கு நாட்கள் ...

3 நிமிட வாசிப்பு

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்த நான்கு நாட்கள் சிறப்பு முகாம்!

பெட்ரோல், டீசலுக்கு ஜிஎஸ்டி: நாளைய கவுன்சில் கூட்டத்தில் முடிவு! ...

5 நிமிட வாசிப்பு

பெட்ரோல், டீசலுக்கு ஜிஎஸ்டி: நாளைய கவுன்சில் கூட்டத்தில் முடிவு!

வியாழன் 26 ஆக 2021