மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 26 ஆக 2021

கிச்சன் கீர்த்தனா: கணவன் மனைவி சாதம்

கிச்சன் கீர்த்தனா: கணவன் மனைவி சாதம்

அரிசியும் பருப்பும் போல என்றும் பிரியாமல் இருக்க வேண்டும் என்பதை உணர்த்தும் விதமாக இந்த உணவை கணவன் மனைவி என்ற பெயரில் சேலம் மாவட்டத்தில் அழைக்கின்றனர். காரம், மசாலாக்களின் சேர்க்கை குறைவாக உள்ள உணவு இது. உணவு எளிதில் ஜீரணமாகவும், வாயுப் பிரச்னை, வயிற்று எரிச்சல், வலி போன்றவை நீங்குவதற்காகவும் புதுமண தம்பதிகளுக்குப் பரிமாறப்படுகிறது.

என்ன தேவை?

அரிசி - 500 கிராம்

துவரம்பருப்பு - 200 கிராம்

காய்ந்த மிளகாய் - 5

சீரகம், மிளகு - தேவையான அளவு

கறிவேப்பிலை - சிறிதளவு

பூண்டு - 4 பல்

எண்ணெய், நெய், மஞ்சள்தூள், உப்பு - தேவையான அளவு

எப்படிச் செய்வது?

அரிசியையும் பருப்பையும் ஒன்றாகக் கழுவி 10 நிமிடங்கள் ஊற வைக்கவும். குக்கரில் எண்ணெய்விட்டு அடுப்பில் வைக்கவும். எண்ணெய் சூடானதும் சீரகம், மிளகு தாளித்து, கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும் அதன்பின் காய்ந்த மிளகாயை சிறிது சிறிதாக கிள்ளிப் போட்டு தாளிக்கவும். பூண்டை ஒன்றிண்டாக இடித்துப் போடவும். பிறகு ஊறவைத்த அரிசி, பருப்பை குக்கரில் சேர்த்து, உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து நன்றாகக் கிளறி தேவையான தண்ணீர்விட்டு குக்கரை மூடவும். மூன்று விசில் வந்ததும் இறக்கி நெய் சேர்த்துக் கிளறி சூடாகப் பரிமாறவும்.

பெயரைச் சொல்லுங்கள் நடவடிக்கை உறுதி: ராஜகண்ணப்பன்

2 நிமிட வாசிப்பு

பெயரைச் சொல்லுங்கள் நடவடிக்கை உறுதி: ராஜகண்ணப்பன்

பாரத ஸ்டேட் வங்கிக்கு ரூ.1 கோடி அபராதம் விதித்த ரிசர்வ் வங்கி... ...

4 நிமிட வாசிப்பு

பாரத ஸ்டேட் வங்கிக்கு ரூ.1 கோடி அபராதம் விதித்த ரிசர்வ் வங்கி... எதற்காக?

ஓடிபி மூலம் பண மோசடி: காவல் துறையின் அறிவிப்பு!

3 நிமிட வாசிப்பு

ஓடிபி மூலம் பண மோசடி: காவல் துறையின் அறிவிப்பு!

வியாழன் 26 ஆக 2021