மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 25 ஆக 2021

பழங்குடியினருக்குக் குடும்ப அட்டை வழங்க உத்தரவு!

பழங்குடியினருக்குக் குடும்ப அட்டை வழங்க உத்தரவு!

குடும்ப அட்டை இல்லாத பழங்குடியினக் குடும்பங்களுக்குக் குடும்ப அட்டை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

திண்டுக்கல் பண்ணைக்காட்டைச் சேர்ந்த மல்லிகா என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனுவொன்று தாக்கல் செய்தார். அதில், தமிழ்நாட்டில் மொத்த மக்கள்தொகையில் 1.5 சதவிகிதம் பேர் பழங்குடியினர். கொரோனா தொற்றுக் காலத்தில் பழங்குடியின மக்கள் வாழ்வாதாரம் இழந்து மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். குடும்ப அட்டை இல்லாததால் அரசின் கொரோனா நிவாரண நிதி மற்றும் மளிகைப் பொருட்கள் தொகுப்பும் பழங்குடியினக் குடும்பங்களுக்குக் கிடைக்கவில்லை. அதனால், தமிழ்நாட்டில் உள்ள பழங்குடியினர் குடும்பங்களைக் கண்டறிந்து, அவர்களுக்கு விரைவில் குடும்ப அட்டை வழங்க உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனுவை நேற்று (ஆகஸ்ட் 24) தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி, எம்.துரைசாமி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. மனுதாரர் கோரிக்கை தொடர்பாக 15 நாளில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறையில் புதிதாக மனு அளிக்க வேண்டும். பின்னர் அந்த மனு அடிப்படையில் முறையாக ஆய்வு செய்து குடும்ப அட்டை இல்லாத பழங்குடியினக் குடும்பங்களுக்குக் குடும்ப அட்டை வழங்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

-வினிதா

நெல்லை - தென்காசி நான்கு வழிச்சாலை: வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் ...

3 நிமிட வாசிப்பு

நெல்லை - தென்காசி நான்கு வழிச்சாலை: வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் நடப்படும் மரங்கள்!

தங்கப் பத்திரம் விற்பனை: இந்திய அளவில் நாமக்கல் கோட்டம் முதலிடம்! ...

3 நிமிட வாசிப்பு

தங்கப் பத்திரம் விற்பனை: இந்திய அளவில் நாமக்கல் கோட்டம் முதலிடம்!

மணிகண்டன் மரணம்: வெளியான சிசிடிவி காட்சிகள்!

4 நிமிட வாசிப்பு

மணிகண்டன் மரணம்: வெளியான சிசிடிவி காட்சிகள்!

புதன் 25 ஆக 2021