மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 25 ஆக 2021

கொடைக்கானலில் படகு சவாரி கட்டணம் உயர்வு!

கொடைக்கானலில் படகு சவாரி கட்டணம் உயர்வு!

கொடைக்கானலில் படகு சவாரிக்கான கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது பயணிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டில் கொரோனா பரவல் குறைந்து வரும் நிலையில் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. அதன்படி தற்போது நடைமுறையில் உள்ள ஊரடங்கில் கடற்கரை, தியேட்டர், பார் மற்றும் கொடைக்கானல் நட்சத்திர ஏரியில் படகு சவாரி செய்யவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

கொடைக்கானலில் கண்டு களிக்கக் கூடிய சுற்றுலா பகுதிகள் அதிகமாக இருப்பதால், நான்கு மாதங்களுக்கு பிறகு அரசு அனுமதியளித்ததையடுத்து மக்கள் ஆர்வமுடன் சுற்றுலா தலங்களுக்கு செல்ல ஆரம்பித்தனர்.

இந்நிலையில் கொடைக்கானல் நட்சத்திர ஏரியில் படகு சவாரி செய்ய அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக மக்கள் புகார் அளித்துள்ளனர். வார நாட்களில் ஒரு கட்டணம், வார இறுதி நாட்களில் ஒரு கட்டணம், எக்ஸ்பிரஸ் கட்டணம் என தனித்தனியாக வசூலிக்கப்படுகிறது.

2 நபர்கள் செல்லும் மிதி படகின் கட்டணம் ரூ.100லிருந்து ரூ.150ஆகவும், 4 நபர்கள் செல்லும் மிதி படகின் கட்டணம் ரூ.200லிருந்து ரூ.250ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் வரிசையில் நிற்காமல் நேரடியாக படகு சவாரி மேற்கொள்ள எக்ஸ்பிரஸ் கட்டணமும் ரூ.100 உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த முறையில்லாத கட்டண வசூலுக்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

-வினிதா

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

இந்தியாவிலிருந்து ஃபோர்டு வெளியேற முக்கிய காரணம் என்ன?

9 நிமிட வாசிப்பு

இந்தியாவிலிருந்து ஃபோர்டு வெளியேற முக்கிய காரணம் என்ன?

முதுநிலை ஆசிரியர் தேர்வு: முறைகேட்டில் ஈடுபட்டால் ஆயுட்கால ...

3 நிமிட வாசிப்பு

முதுநிலை ஆசிரியர் தேர்வு: முறைகேட்டில் ஈடுபட்டால் ஆயுட்கால தடை!

புதன் 25 ஆக 2021