மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 25 ஆக 2021

நடிகர் விவேக் மரணம்: தொடங்கும் விசாரணை!

நடிகர் விவேக் மரணம்: தொடங்கும் விசாரணை!

நடிகர் விவேக் மரணம் தொடர்பான புகாரை தேசிய மனித உரிமை ஆணையம் விசாரணைக்கு ஏற்றுள்ளது.

சின்ன கலைவாணர் என்று அழைக்கப்படும் தமிழ் திரை உலகின் முன்னணி நகைச்சுவை நடிகர் விவேக், காமெடி மூலம் நல்ல கருத்துக்களை மக்களிடம் பரப்பி வந்தவர். அதுமட்டுமில்லாமல், மரம் நடுதல் உள்ளிட்ட சமூக சேவைகளிலும் தன்னை ஈடுபடுத்தி கொண்டவர்.

கடந்த ஏப்ரல் மாதம் 16ஆம்தேதி திடீரென்று நடிகர் விவேக்கிற்கு நெஞ்சுவலி ஏற்பட்டு மயக்கம் அடைந்தார். உடனடியாக அவர் வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் 17ஆம் தேதி காலையில் உயிரிழந்தார்.

இவரது மரணம் ரசிகர்களுக்கும், திரையுலகினருக்கும் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதற்கிடையில் அவரது மரணத்தில் சந்தேகம் ஏற்பட்டது. ஏனெனில், இறப்பதற்கு முந்தைய நாள்தான் விவேக் கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொண்டார். அதனால், அவர் மரணத்துக்கும், தடுப்பூசிக்கும் சம்பந்தம் இருக்குமா? என பலரும் கேள்வியெழுப்ப தொடங்கினர். இது பெரிய விவாதத்துக்கும் வழிவகுத்தது.

இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக விவேக் மரணத்துக்கும், தடுப்பூசி போட்டுக் கொண்டதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று அவருக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள் முன்னிலையில் சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டியளித்தார்.

இருப்பினும் இந்த விவகாரம் முடிந்தபாடில்லை. விழுப்புரத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சரவணன் என்பவர் தேசிய மனித உரிமை ஆணையத்துக்கு புகார் ஒன்றை அனுப்பினார். அதில், ‛நல்ல உடல்நலத்துடன் இருந்து வந்த நடிகர் விவேக், கொரோனா தடுப்பூசி போடப்பட்ட பிறகு உயிரிழந்திருக்கிறார். அதுகுறித்து விசாரணை நடத்த மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், நடிகர் விவேக் மரணம் தொடர்பான புகாரை விசாரணைக்கு ஏற்பதாக தேசிய மனித உரிமை ஆணையம் அறிவித்துள்ளது.

தடுப்பூசி குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக நடிகர் விவேக் தடுப்பூசி செலுத்திக் கொண்டார். ஆனால், கடைசியில் அது வேறு விதத்தில் முடிவடைந்துள்ளது. எதுவாக இருப்பினும், இதுதொடர்பான விசாரணைக்கு பின்னரே, உண்மை என்ன என்பது தெரியவரும்.

-வினிதா

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்! ...

2 நிமிட வாசிப்பு

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்!

இலங்கை கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது ஏன்?

5 நிமிட வாசிப்பு

இலங்கை  கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது ஏன்?

புதன் 25 ஆக 2021