மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 25 ஆக 2021

மதுரை டு செங்கோட்டை: முன்பதிவில்லாத சிறப்பு ரயில் இயக்கம்!

மதுரை டு செங்கோட்டை: முன்பதிவில்லாத சிறப்பு ரயில் இயக்கம்!

வருகிற 30ஆம் தேதி முதல் மதுரையிலிருந்து செங்கோட்டைக்கு முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

கொரோனா தொற்று காரணமாக மதுரை கோட்ட ரயில்வேயில் ரயில் சேவை நிறுத்தப்பட்டிருந்தது. ஆனால், 200 கிமீ தூரத்துக்கு மேல் உள்ள நாகர்கோவில் - கோவை, மதுரை - விழுப்புரம், மதுரை - புனலூர் பயணிகள் ரயில்கள், எக்ஸ்பிரஸ் ரயில்களாக மாற்றம் செய்யப்பட்டு இயக்கப்படுகின்றன.

தற்போது கொரோனா பரவல் குறைந்து வருவதையடுத்து, பயணிகள் ரயில்களை இயக்குவதற்கு ஏதுவாக, ரயில் பெட்டிகளைத் தயார் நிலையில் வைத்திருக்குமாறு மதுரை கோட்ட ரயில்வேக்கு ஏற்கனவே சுற்றறிக்கை அனுப்பப்பட்டது.

இந்த நிலையில் மதுரை கோட்ட ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “மதுரை கோட்ட ரயில்வேக்கு உட்பட்ட மதுரை - செங்கோட்டை இடையே வருகிற 30ஆம் தேதி முதல் முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில் இயக்கப்படும். அதன்படி, இந்த சிறப்பு ரயில் (வ.எண்.06504) மதுரையில் இருந்து காலை 7.10 மணிக்குப் புறப்பட்டு காலை 10.35 மணிக்கு செங்கோட்டை ரயில் நிலையம் சென்றடையும்.

மறுமார்க்கத்தில் சிறப்பு ரயில் (வ.எண்.06503) செங் கோட்டையில் இருந்து மாலை 3.45 மணிக்கு புறப்பட்டு இரவு 7.10 மணிக்கு மதுரை ரயில்நிலையம் வந்தடையும். இந்த ரயிலில் 12 இரண்டாம் வகுப்பு இருக்கை வசதி பெட்டிகள், சரக்கு மற்றும் காப்பாளர் பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும்.

திருப்பரங்குன்றம், திருமங்கலம், கள்ளிக்குடி, விருதுநகர், திருத்தங்கல், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், சங்கரன்கோவில், பாம்பு கோவில் சந்தை, கடையநல்லூர் மற்றும் தென்காசி ஆகிய ரயில் நிலையங்களில் ரயில்கள் நின்று செல்லும். சிறப்பு ரயில் என்பது ரயில் கட்டணத்துக்குப் பதிலாக எக்ஸ்பிரஸ் ரயில் கட்டணம் வசூலிக்கப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

-வினிதா

நெல்லை - தென்காசி நான்கு வழிச்சாலை: வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் ...

3 நிமிட வாசிப்பு

நெல்லை - தென்காசி நான்கு வழிச்சாலை: வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் நடப்படும் மரங்கள்!

தங்கப் பத்திரம் விற்பனை: இந்திய அளவில் நாமக்கல் கோட்டம் முதலிடம்! ...

3 நிமிட வாசிப்பு

தங்கப் பத்திரம் விற்பனை: இந்திய அளவில் நாமக்கல் கோட்டம் முதலிடம்!

மணிகண்டன் மரணம்: வெளியான சிசிடிவி காட்சிகள்!

4 நிமிட வாசிப்பு

மணிகண்டன் மரணம்: வெளியான சிசிடிவி காட்சிகள்!

புதன் 25 ஆக 2021