மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 25 ஆக 2021

கிச்சன் கீர்த்தனா: சுருட்டைப் பணியாரம்!

கிச்சன் கீர்த்தனா: சுருட்டைப் பணியாரம்!

புதுமணத் தம்பதியரின் உடல் சோர்வைப் போக்குவதற்குக் கொடுக்கப்படும் விசேஷ உணவு இது. தேங்காயில் உள்ள லாரிக் ஆசிட் மற்றும் காப்ரிக் ஆசிட் ஆகியவற்றுக்கு வைரஸ் மற்றும் பாக்டீரிய நுண்கிருமிகளை எதிர்க்கும் திறன் உண்டு. உடலில் உள்ள பாக்டீரியா, வைரஸ் தொற்றுகளை அழிப்பதற்காகவே இந்த உணவு கொடுக்கப்படுகிறது.

என்ன தேவை?

மைதா - 250 கிராம்

சர்க்கரை - 75 கிராம்

தேங்காய்த் துருவல் - ஒரு கப்

ஏலக்காய் - 3

எண்ணெய் - தேவையான அளவு

உப்பு - சிறிதளவு

எப்படிச் செய்வது?

பாத்திரத்தில் தண்ணீர்விட்டு மைதா மற்றும் உப்பு சேர்த்து தோசை மாவு பதத்துக்குக் கரைத்துக்கொள்ளவும். பின் தேங்காய்த் துருவல், சர்க்கரை, ஏலக்காய் மூன்றையும் சேர்த்துக் கலந்து வைத்துக்கொள்ளவும். தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, கரைத்து வைத்த மாவை தோசை போல் வார்க்கவும். சுற்றிலும் எண்ணெய்விடவும். தேங்காய்த் துருவல் கலவையை மாவின் மீது வைத்து இரண்டு பக்கமும் மடித்துத் திருப்பிப் போட்டு வேக வைக்கவும். பின் சிவக்க வெந்ததும் எடுத்து வைத்துப் பரிமாறவும்.

நேற்றைய ரெசிப்பி: வெந்தயக்களி

தமிழகத்தின் ஓலா தொழிற்சாலையில் 10,000 பெண் ஊழியர்கள்!

5 நிமிட வாசிப்பு

தமிழகத்தின் ஓலா தொழிற்சாலையில் 10,000 பெண் ஊழியர்கள்!

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்த நான்கு நாட்கள் ...

3 நிமிட வாசிப்பு

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்த நான்கு நாட்கள் சிறப்பு முகாம்!

பெட்ரோல், டீசலுக்கு ஜிஎஸ்டி: நாளைய கவுன்சில் கூட்டத்தில் முடிவு! ...

5 நிமிட வாசிப்பு

பெட்ரோல், டீசலுக்கு ஜிஎஸ்டி: நாளைய கவுன்சில் கூட்டத்தில் முடிவு!

புதன் 25 ஆக 2021