மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 24 ஆக 2021

'G' பதிவெண்கள் கொண்ட வாகனங்களைக் கண்காணிக்க உத்தரவு!

'G' பதிவெண்கள் கொண்ட வாகனங்களைக் கண்காணிக்க உத்தரவு!

சென்னையில் 'G' அல்லது 'அ' என்ற பதிவு எண்கள் கொண்ட தனியார் வாகனங்களைக் கண்காணித்து நடவடிக்கை எடுக்க சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.

தமிழ்நாடு அரசு அலுவலர்கள், அரசு பணியில் மிகப்பெரிய பொறுப்பில் உள்ளவர்களுக்கு அரசு சார்பில் வழங்கப்பட்டுள்ள வாகனங்களில் அரசு வாகனம் என்பதை குறிக்கும் வகையில், கவர்ன்மென்ட் என்ற ஆங்கில வார்த்தையின் முதல் எழுத்தாக 'G' என்ற அடையாளத்துடன் கூடிய வாகனப் பதிவு எண்கள் வழங்கப்படுகிறது.

ஆனால், அரசு வாகனம் இல்லாத தனியார் வாகனங்களில், போக்குவரத்து சட்டத்திற்கு எதிராக 'G' என்ற எழுத்துடன், ஏராளமான வாகனங்கள் பயன்படுத்தப்பட்டு வருவதாக சென்னை காவல் துறைக்கு புகார் வந்தது. இதுகுறித்து கண்காணித்து நடவடிக்கை எடுக்குமாறு சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் போக்குவரத்து போலீஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி, சென்னையில் உள்ள முக்கிய சாலைகளில் செல்லும் 'G' என்ற பதிவு எண் கொண்ட தனியார் வாகனங்களை நிறுத்தி அவர்கள் அரசு பணியில் இருப்பவர்களா, இல்லையா என்பதை விசாரணையின் மூலம் உறுதிபடுத்தி, அப்படி இல்லையென்றால் அபராதம் விதித்தும் வருகின்றனர்.

இந்தச் சோதனையின்போது காவல் துறையில் இல்லாதவர்கள் தங்களின் இருசக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் முன்பு “Police” என்ற வார்த்தையை ஒட்டியிருக்கும் வாகனங்களும் கண்காணிக்கப்படுகிறது.

அவ்வாறு காவல் துறையில் இல்லாதவர்கள் இதுபோன்று வைத்திருந்தால், அவர்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

ஊடகத் துறை, காவல் துறை, அரசாங்கச் சின்னங்களைப் பயன்படுத்தி பல்வேறு குற்றச் சம்பவங்கள் நடந்துள்ள நிலையில், சென்னை காவல் துறை சார்பில் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

-வினிதா

நெல்லை - தென்காசி நான்கு வழிச்சாலை: வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் ...

3 நிமிட வாசிப்பு

நெல்லை - தென்காசி நான்கு வழிச்சாலை: வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் நடப்படும் மரங்கள்!

தங்கப் பத்திரம் விற்பனை: இந்திய அளவில் நாமக்கல் கோட்டம் முதலிடம்! ...

3 நிமிட வாசிப்பு

தங்கப் பத்திரம் விற்பனை: இந்திய அளவில் நாமக்கல் கோட்டம் முதலிடம்!

மணிகண்டன் மரணம்: வெளியான சிசிடிவி காட்சிகள்!

4 நிமிட வாசிப்பு

மணிகண்டன் மரணம்: வெளியான சிசிடிவி காட்சிகள்!

செவ்வாய் 24 ஆக 2021