மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 24 ஆக 2021

பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்!

பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்!

பொறியியல் படிப்புகளில் சேரும் ஆன்லைன் விண்ணப்பப் பதிவுக்கு இன்று (ஆகஸ்ட் 24) கடைசி நாள் ஆகும்.

பி.இ, பி.டெக் போன்ற பொறியியல் படிப்புகளில் சேருவதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பப் பதிவு செய்யப்பட்டு, அதன் வாயிலாகவே கலந்தாய்வு நடத்தப்பட்டு மாணவர் சேர்க்கை ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது. அந்தவகையில் நடப்பு கல்வியாண்டுக்குப் பொறியியல் படிப்புகளில் சேருவதற்கான விண்ணப்பப் பதிவு கடந்த ஜூலை மாதம் 26ஆம் தேதி தொடங்கியது.

தமிழகம் முழுவதும் உள்ள 450-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளில் ஒன்றரை லட்சத்துக்கும் மேற்பட்ட இடங்கள் இருக்கின்றன. இந்த இடங்களில் சேருவதற்கு மாணவ-மாணவிகள் விண்ணப்பப் பதிவு தொடங்கியதில் இருந்து ஆர்வமுடன் விண்ணப்பித்து வருகின்றனர். சுய விவரங்கள் பதிவு, விண்ணப்பக் கட்டணம் செலுத்துவது, சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்வது போன்ற நடைமுறையின் அடிப்படையில் விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்வதற்கான முழுப்பணிகளும் நிறைவு பெறுகின்றன.

அதன்படி, நேற்றைய தகவல்படி, ஒரு லட்சத்து 65,656 பேர் விண்ணப்பப் பதிவு செய்து இருக்கின்றனர். இதில் ஒரு லட்சத்து 33,971 பேர் விண்ணப்பக் கட்டணம் செலுத்தி இருப்பதாகவும், இவர்களில் ஒரு லட்சத்து 24,0 15 பேர் சான்றிதழ்களை பூர்த்தி செய்து விண்ணப்பப் பதிவுக்கான முழு பணிகளையும் நிறைவு செய்து இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் விண்ணப்பப் பதிவு செய்வதற்கு இன்று (ஆகஸ்ட் 24) கடைசி நாள் ஆகும்.

கடந்த ஆண்டில் கிட்டத்தட்ட ஒன்றரை லட்சம் பேர் விண்ணப்பித்த நிலையில், ஒரு லட்சத்து 12,406 பேர் தகுதியுடையவர்களாகக் கருதப்பட்டனர். இந்த ஆண்டும் அதேபோல் 1 லட்சத்து 65,000க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்து இருக்கின்றனர். இதில் எவ்வளவு பேர் தகுதியானவர்கள் என்பது தரவரிசைப்பட்டியல் வெளியாகும்போது தெரிந்துவிடும். இதன்படி, முதற்கட்ட கலந்தாய்வு செப்டம்பர் 7ஆம் தேதி தொடங்கி, அக்டோபர் 4ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது.

-ராஜ்

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

3 நிமிட வாசிப்பு

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

காதலிக்கு போன்: கிணற்றில் விழுந்து தவித்த இளைஞர்!

4 நிமிட வாசிப்பு

காதலிக்கு போன்: கிணற்றில் விழுந்து  தவித்த இளைஞர்!

செவ்வாய் 24 ஆக 2021