மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 24 ஆக 2021

டெட் தேர்ச்சி சான்றிதழ் ஆயுள் முழுவதும் செல்லும்: தமிழ்நாடு அரசு!

டெட் தேர்ச்சி சான்றிதழ் ஆயுள் முழுவதும் செல்லும்: தமிழ்நாடு அரசு!

ஆசிரியர் தகுதித்தேர்வு தேர்ச்சி சான்றிதழ் ஆயுள் முழுவதும் செல்லும் என தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

ஆசிரியர் பணிக்குத் தகுதியானவர்களைத் தேர்வு செய்வதற்கு TET எனப்படும் நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது. ஆசிரியர் கல்விக்கான தேசிய கவுன்சில், கடந்த 2011ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியிட்ட வழிகாட்டுதல்களின்படி, ஆசிரியர் தகுதித் தேர்வு மாநில அரசுகளால் நடத்தப்பட்டு வருகிறது. ஆசிரியர் தகுதி தேர்வு மொத்தம் 2 தாள்களைக் கொண்டது. முதல் தாளில் தேர்ச்சி பெறுபவர்கள் இடைநிலை ஆசிரியராகவும், 2 ஆம் தாளில் தேர்ச்சி பெறுபவர்கள் பட்டதாரி ஆசிரியராகவும் பணிபுரியலாம். இத்தேர்வில் வெற்றிபெற்றவர்களுக்கு அதற்கான சான்றிதழ் வழங்கப்படும். இதுவரையில் அந்தச் சான்றிதழானது 7 வருடங்கள் வரை மட்டுமே செல்லுபடியாகும் என விதிமுறை அமலில் இருந்தது. சான்றிதழ் காலாவதியானால் மீண்டும் தகுதி தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டிய நிலை இருந்தது. இந்த விதிமுறையை மாற்றக் கோரி ஆசிரியர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர்.

இந்நிலையில் தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை செயலர் காகர்லா உஷா இன்று(ஆகஸ்ட் 24) வெளியிட்டுள்ள அறிவிப்பில், “ ஒன்றிய அரசின் இலவச குழந்தைகள் கட்டாய கல்வி உரிமைச் சட்டம் 2009ன்படி தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு பள்ளிகள் அரசு உதவிபெறும், சுயநிதிப் பள்ளிகளில் இடைநிலை பட்டதாரி ஆசிரியர் நியமனங்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் 2012, 2014, 2017, 2019 ஆகிய ஆண்டுகளில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்பட்டு, அதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

ஆசிரியர் தகுதித் தேர்வு சான்றிதழ் 7 ஆண்டுகள் வரை மட்டும் செல்லும் என்ற நடைமுறை உள்ளது. தற்போது அதில் மாற்றம் செய்யப்பட்டு, ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி சான்றிதழ் வாழ்நாள் முழுவதும் செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பயன்பெறுவார்கள் என்று கூறப்படுகிறது.

-வினிதா

பெயரைச் சொல்லுங்கள் நடவடிக்கை உறுதி: ராஜகண்ணப்பன்

2 நிமிட வாசிப்பு

பெயரைச் சொல்லுங்கள் நடவடிக்கை உறுதி: ராஜகண்ணப்பன்

பாரத ஸ்டேட் வங்கிக்கு ரூ.1 கோடி அபராதம் விதித்த ரிசர்வ் வங்கி... ...

4 நிமிட வாசிப்பு

பாரத ஸ்டேட் வங்கிக்கு ரூ.1 கோடி அபராதம் விதித்த ரிசர்வ் வங்கி... எதற்காக?

ஓடிபி மூலம் பண மோசடி: காவல் துறையின் அறிவிப்பு!

3 நிமிட வாசிப்பு

ஓடிபி மூலம் பண மோசடி: காவல் துறையின் அறிவிப்பு!

செவ்வாய் 24 ஆக 2021