மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 24 ஆக 2021

சென்னையில் நில அதிர்வு : அச்சம் வேண்டாம்!

சென்னையில் நில அதிர்வு : அச்சம் வேண்டாம்!

சென்னைக்கு கிழக்கே வங்கக் கடலில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் தாக்கத்தால் சென்னையின் சில இடங்களில் நில அதிர்வு உணரப்பட்டன.

சென்னையின் அடையாறு, பெசன்ட் நகர், ஆழ்வார்பேட்டை, அண்ணா நகர், தியாகராய நகர், நுங்கம்பாக்கம், ஆலந்தூர், மயிலாப்பூர், மாதவரம், கொளத்தூர், அம்பத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இன்று (ஆகஸ்ட் 24) மதியம் லேசான நில அதிர்வு ஏற்பட்டது. இதை பலரும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து இருந்தனர்.

இதை தேசிய நில அதிர்வு கண்காணிப்பு மையம் உறுதி செய்துள்ளது. சென்னை-ஆந்திராவை ஒட்டியுள்ள வங்கக் கடலில் 10 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதால், சென்னையில் சிலபகுதிகளில் நில அதிர்வு உணரப்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.1 ஆக பதிவாகியுள்ளது.

ஆந்திர மாநிலம் காக்கிநாடாவிலிருந்து 296 கி.மீ கிழக்கு திசையில், சென்னைக்கு சுமார் 320 கி.மீ தொலைவில் வங்கக் கடலில் 10 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.

நில அதிர்வு சென்னையில் பாதிப்பை ஏற்படுத்தவில்லையென்றாலும், இது மக்களை பீதியடைய செய்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் ட்விட்டரில்,“ வங்கக் கடலில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக காக்கிநாடா,சென்னை, குண்டூர், திருப்பதி ஆகிய பகுதிகளில் நில அதிர்வு உணரப்பட்டன. மக்கள் பயப்பட தேவையில்லை. இது வழக்கமானதுதான். அந்த நிகழ்வு நடந்து முடிந்துவிட்டது.அது சென்னையிலிருந்து வெகு தொலைவில் நடந்தது. குறிப்பாக வாட்ஸ் அப் வதந்திகளை நம்ப வேண்டாம். 2019ஆம் ஆண்டிலும் இதேமாதிரியான லேசான நில அதிர்வு ஏற்பட்டது” என்று கூறியுள்ளார்.

-வினிதா

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

3 நிமிட வாசிப்பு

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

காதலிக்கு போன்: கிணற்றில் விழுந்து தவித்த இளைஞர்!

4 நிமிட வாசிப்பு

காதலிக்கு போன்: கிணற்றில் விழுந்து  தவித்த இளைஞர்!

செவ்வாய் 24 ஆக 2021