மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 24 ஆக 2021

தடுப்பூசி போடாத பேராசிரியர்களுக்கு கட்டாய விடுப்பு!

தடுப்பூசி போடாத பேராசிரியர்களுக்கு கட்டாய விடுப்பு!

கல்லூரி பேராசிரியர்கள்,பணியாளர்கள்,மாணவர்கள் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தியிருப்பது கட்டாயம். அப்படி தடுப்பூசி போடாதவர்கள் கட்டாய விடுப்பில் அனுப்பப்படுவர் என்று கல்லூரி கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் கொரோனா பரவல் குறைந்து வருவதையடுத்து ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. அதன்படி, வருகிற செப்டம்பர் 1ஆம் தேதி முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. பள்ளிகள் திறந்த பின்பு பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் ஏற்கனவே வெளியிட்டுள்ள நிலையில், தற்போது கல்லூரிகளில் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை கல்லூரி கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ளது.

அதில், ”அனைத்து கல்லூரிகளிலும், வகுப்பறைகள், நாற்காலிகள், விளையாட்டுப்பொருட்கள் மற்றும் ஆய்வகங்கள் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட்டிருக்க வேண்டும்.

கொரோனா சிகிச்சை மையங்களாக மாற்றப்பட்டுள்ள கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகளே தொடர இன்று நடைபெறும் கூட்டத்தில் முடிவு செய்யப்படும்.

மாணவர்கள், பேராசிரியர்கள், பணியாளர்கள் என அனைவருக்கும் இரண்டு தவணை தடுப்பூசி போடப்பட்டிருப்பது கட்டாயம். தடுப்பூசி போடாத பேராசிரியர்கள், பணியாளர்கள் கட்டாய விடுப்பில் அனுப்பப்படுவார்கள்.

மாற்றுத்திறனாளி மாணவர்கள் கல்லூரிக்கு வருகை தர வேண்டிய அவசியம் இல்லை.

தடுப்பூசி போடாத மாணவர்களுக்கு அந்தந்த கல்லூரிகளிலேயே தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்ய வேண்டும்.

நோய் தொற்று உள்ள மாணவர்களை கண்டறிந்தால் அவருடன் தொடர்புடைய அனைவருக்கும் ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்ய வேண்டும்.

பெற்றோர், ஆசிரியர் கூட்டம் கூட்டி பெற்றோர்களின் ஆலோசனையை பெற வேண்டும்.

கல்லூரி வளாகத்தினுள் பயன்படாத பிளாஸ்டிக் கப்புகள், தேநீர் கப்புகள், டயர்கள், விஷ ஜந்துக்கள் தஞ்சமடையும் இடங்களை உடனே அப்புறப்படுத்த வேண்டும்.

நுழைவு வாயில் மற்றும் வெளியேறும் வழிகளில் கண்காணிப்பு குழு அமைத்து கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்றப்படுகிறதா என்பதை கண்காணிக்க வேண்டும்.

சுத்தமான குடிநீர் வசதியினை மாணவர்களுக்கு ஏற்பாடு செய்து தர வேண்டும்.

கல்லூரி தொடங்குவதற்கு ஒரு வார காலத்திற்கு முன்னதாகவே கல்லூரி வளாகத்தினை சுத்தம் செய்திட முன்னேற்பாடுகளை செய்ய வேண்டும்” என கல்லூரி கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.

-வினிதா

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்! ...

2 நிமிட வாசிப்பு

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்!

இந்துக்களை மட்டுமே நியமிக்க முடியும்: தமிழ்நாடு அரசு!

5 நிமிட வாசிப்பு

இந்துக்களை மட்டுமே நியமிக்க முடியும்: தமிழ்நாடு அரசு!

செவ்வாய் 24 ஆக 2021