மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 24 ஆக 2021

சாலையில் கிடந்த செல்போனை ஒப்படைத்த பெண்ணுக்கு மரியாதை!

சாலையில் கிடந்த செல்போனை ஒப்படைத்த பெண்ணுக்கு மரியாதை!

சென்னையில் கீழே கிடந்த செல்போனை கண்டெடுத்து காவல்நிலையத்தில் ஒப்படைத்த பெண்ணுக்கு பெண் காவல் ஆய்வாளர் வெகுமதி அளித்து மதிய விருந்து அளித்து பாராட்டினார்.

சென்னை கொருக்கு பேட்டையைச் சேர்ந்த கண்ணன் என்பவர் கடந்த 20ஆம் தேதி மாலை வேலை முடித்து இரவு வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அவரின் பாக்கெட்டில் வைக்கப்பட்டிருந்த விலை உயர்ந்த ஆண்ட்ராய்ட் செல்போன் வண்ணாரப்பேட்டை மின்ட் மேம்பாலம் அருகே கீழே விழுந்துள்ளது. செல்போன் விழுந்ததை கண்ணன் கவனிக்காமல் சென்றுவிட்டார்.

அப்போது அந்த வழியாக சென்ற கமலா என்ற பெண் கீழே கிடந்த செல்போனை எடுத்து வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார். கண்ணனை கண்டுபிடித்த காவல்துறையினர் அவரிடம் செல்போன் வாங்கியதற்கான போதிய ஆதாரங்களை பெற்றனர். கமலா கண்டெடுத்தது கண்ணனுடைய செல்போன்தான் என்பதை போலீசார் உறுதி செய்தனர்.

இதையடுத்து, வண்ணாரபேட்டை உதவி ஆணையர் ஆனந்தகுமார், பெண் காவல் ஆய்வாளர் பிரான்வின் டேனி ஆகியோர் கண்ணனிடத்தில் செல்போனை ஒப்படைத்தனர்.

செல்போனை கண்டுபிடித்து கொடுத்த கமலாவை பாராட்டும் விதமாக உதவி ஆணையரின் உத்தரவின்படி வண்ணாரபேட்டை பெண் காவல் ஆய்வாளர் பிரான்வின் டேனி, கமலாவை தொலைபேசியில் பேசி காவல் நிலையத்துக்கு வரவழைத்தார்.

காவல் நிலையத்திற்கு வந்த கமலாவுக்கு, பெண் காவல் ஆய்வாளர் வெகுமதி அளித்து மீன் குழம்புடன் கூடிய மதிய விருந்து அளித்து கவுரவித்தார்.

-வினிதா

‘பள்ளிக்கு போங்க தம்பி’: கரூர் மாவட்ட ஆட்சியர்!

2 நிமிட வாசிப்பு

‘பள்ளிக்கு போங்க தம்பி’: கரூர் மாவட்ட ஆட்சியர்!

குவைத்தில் வீட்டு வேலை: பெண்கள் விண்ணப்பிக்கலாம்!

4 நிமிட வாசிப்பு

குவைத்தில் வீட்டு வேலை: பெண்கள் விண்ணப்பிக்கலாம்!

கண்டித்த ஆசிரியையை கன்னத்தில் அறைந்த மாணவர்!

3 நிமிட வாசிப்பு

கண்டித்த ஆசிரியையை கன்னத்தில் அறைந்த மாணவர்!

செவ்வாய் 24 ஆக 2021