மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 24 ஆக 2021

பள்ளிகள் திறப்பு: ஆந்திரா அடிக்கும் அலாரம்!

பள்ளிகள்  திறப்பு: ஆந்திரா அடிக்கும் அலாரம்!

ஆந்திராவில் இரண்டு அரசு பள்ளிகளைச் சேர்ந்த 9 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் படிப்படியாக குறைந்து வருகிறது. இதனால் மாநில அரசுகள் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை அளித்து வருகின்றன. பல்வேறு மாநிலங்களிலும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. ஆந்திராவிலும் கடந்த ஆகஸ்ட் 16ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள இரண்டு அரசு பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதில், ஒன்பதாம் வகுப்பு படிக்கும் நான்கு பேருக்கும், பத்தாம் வகுப்பு படிக்கும் நான்கு பேருக்கும், மூன்றாம் வகுப்பு படிக்கும் ஒருவருக்கும், இரண்டு பெற்றோர்களுக்கும் என மொத்தம் 11 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து பள்ளிகளுக்கு இரண்டு நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டு சுத்தம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. கொரோனா உறுதி செய்யப்பட்ட மாணவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில், பள்ளிகளில் கொரோனா வழிகாட்டு முறைகள் முறையாகவும், முழுமையாகவும் கடைபிடிக்கப்படுகிறதா என்பதை சுகாதார அதிகாரிகள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.

பள்ளிகளிலேயே கொரோனா பரிசோதனை மேற்கொள்ளும் வசதிகளை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளி வளாகத்திற்குள் நுழைவதற்கு முன்பே, ஆசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் ஆகியோர்களுக்கு ஏதேனும் கொரோனா அறிகுறிகள் இருக்கிறதா என்பதை பரிசோதித்து உள்ளே அனுமதிக்க வேண்டும். கொரோனா அறிகுறி தென்படும் நபர்களை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்று அம்மாநிலமுதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.

அக்டோபர் மாதத்தில் கொரோனா மூன்றாம் அலை உச்சமடையும் என தேசிய பேரிடர் மேலாண்மை நிபுணர் குழு எச்சரித்துள்ள நிலையில் தமிழ்நாட்டில் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

-வினிதா

வேலைவாய்ப்பு : தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : தமிழ்நாடு தொழில் வளர்ச்சி  நிறுவனத்தில் பணி!

உயரும் முட்டை விலை... காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

உயரும் முட்டை விலை... காரணம் என்ன?

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - இட்லி... சில சந்தேகங்களும் எளிய ...

5 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - இட்லி... சில சந்தேகங்களும் எளிய தீர்வுகளும்!

செவ்வாய் 24 ஆக 2021