மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 24 ஆக 2021

கிச்சன் கீர்த்தனா: வெந்தயக்களி

கிச்சன் கீர்த்தனா: வெந்தயக்களி

புதுமண தம்பதிகளின் நல்வாழ்வுக்கு அன்பைப் போலவே அறுசுவை உணவுக்கும் முக்கிய இடம் உண்டு. அதில் முக்கிய இடம் பிடிப்பது இந்த வெந்தயக்களி. பெண்களுக்கு ஏற்படும் அடிவயிற்று வலி, இடுப்பு வலி போன்றவற்றுக்கு சிறந்த மருந்து இந்த உணவு. உடல் சூட்டைத் தவிர்க்கவும் களியைச் சாப்பிடலாம். வாயுத் தொல்லையால் ஏற்படும் நெஞ்சு வலியைத் தவிர்க்கவும் இது உதவும்.

என்ன தேவை?

புழுங்கல் அரிசி - ஒரு கப்

வெந்தயம் - 50 கிராம்

ஏலக்காய் - 3

வெல்லம் - 150 கிராம்

நல்லெண்ணெய் - 500 மில்லி

எப்படிச் செய்வது?

வெந்தயம் மற்றும் புழுங்கலரிசியை நன்றாக வறுத்து மிக்ஸியில் அரைத்தெடுத்துக் கொள்ளவும். பின்னர் வாணலியில் தண்ணீர்விட்டு அடுப்பில் வைக்கவும். நீர் கொதித்து வரும்போது வறுத்து அரைத்து வைத்த மாவு கலவையை நீரிலிட்டு கட்டி படாமல் கிளறவும். கெட்டியாக வரும் நேரத்தில் வெல்லம், ஏலக்காய் போட்டு நன்றாகக் கிளறவும். வெல்லம் கரைந்து களி பதத்தில் வரும்போது நல்லெண்ணெய் சேர்த்து இறக்கி வைக்கவும். இளம் சூட்டில் பரிமாறவும்.

நேற்றைய ரெசிப்பி: வட்லாப்பம்

ஃபேஸ்புக் பெயர் மாறும் காரணம்?

5 நிமிட வாசிப்பு

ஃபேஸ்புக் பெயர் மாறும் காரணம்?

பேருந்தில் படிக்கட்டு வழியாக கீழே விழுந்த பெண் பலி!

3 நிமிட வாசிப்பு

பேருந்தில் படிக்கட்டு வழியாக கீழே விழுந்த பெண் பலி!

ஐஸ்கிரீமில் மதுபானம் கலந்து விற்பனை: கடைக்கு சீல்!

2 நிமிட வாசிப்பு

ஐஸ்கிரீமில் மதுபானம் கலந்து விற்பனை: கடைக்கு சீல்!

செவ்வாய் 24 ஆக 2021