மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 23 ஆக 2021

எல்லா வழக்கிலும் கைது கட்டாயம் இல்லை: உச்ச நீதிமன்றம்!

எல்லா வழக்கிலும் கைது கட்டாயம் இல்லை: உச்ச நீதிமன்றம்!

‘காவல் நிலையத்தில் பதிவு செய்யப்படும் அனைத்து வழக்குகளிலும் கைது நடவடிக்கை கட்டாயமில்லை’ என உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

குற்ற வழக்குகளில் ஈடுபட்டவர்களை போலீஸார் கைது செய்வது ஒன்றிய, மாநில காவல் துறையின் சட்ட ரீதியான நடவடிக்கையாகும். இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் சில வாரங்களுக்கு முன் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘சாதாரணமாக விசாரித்து செல்லக் கூடிய விவகாரங்களில்கூட போலீஸார் கைது நடவடிக்கையை மேற்கொள்கின்றனர். இது, தேவையற்ற ஒன்று என்பதால் இது குறித்து உச்ச நீதிமன்றம் விசாரணை நடத்தி. உரிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும்’ எனத் தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது வழங்கப்பட்ட உத்தரவில், ‘சாதாரணமாக, சம்பிரதாயமான முறையில் காவல் துறை செய்யும் கைது நடவடிக்கை, அது சம்பந்தப்பட்ட மனிதர்களின் கெளரவம், தன்மானத்துக்கு மிகப்பெரிய இழுக்காக அமைந்து விடும். கைது செய்வதற்கு சட்டம் அனுமதித்தாலும், அந்த அதிகாரத்தை எந்த காரணம் கொண்டும் தன்னிச்சையாகப் பயன்படுத்தக் கூடாது. இருப்பினும், கொடிய குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகள் தப்பித்து செல்ல வாய்ப்பு இருக்கும்போது கைது நடவடிக்கைகளை கண்டிப்பாக மேற்கொள்ளலாம்.

அதனால், இதுகுறித்த உத்தரவை ஒன்றிய, மாநில அரசுகளும், போலீஸாரும் கருத்தில்கொண்டு வரும் காலங்களில், வழக்குக்கு ஏற்றப்படி செயல்பட வேண்டும்’ என நீதிபதிகள் கூறியுள்ளனர்.

இன்னசென்ட் திவ்யாவுக்கு புதிய பொறுப்பு!

3 நிமிட வாசிப்பு

இன்னசென்ட் திவ்யாவுக்கு புதிய பொறுப்பு!

‘இதுக்கு மேல ஓட்ட முடியாது’: பேருந்தை பாதியில் நிறுத்திய ஓட்டுநர்! ...

3 நிமிட வாசிப்பு

‘இதுக்கு மேல ஓட்ட முடியாது’: பேருந்தை பாதியில் நிறுத்திய ஓட்டுநர்!

புதுவை பேருந்துகளைப் பரிசோதிக்க தமிழ்நாடு அதிகாரிகளுக்கு ...

2 நிமிட வாசிப்பு

புதுவை பேருந்துகளைப் பரிசோதிக்க தமிழ்நாடு அதிகாரிகளுக்கு அனுமதி!

திங்கள் 23 ஆக 2021