மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 22 ஆக 2021

தமிழகத்தில் எட்டு மடங்கு அதிகரித்துள்ள மது விற்பனை!

தமிழகத்தில் எட்டு மடங்கு அதிகரித்துள்ள மது விற்பனை!

தமிழகத்தில் டாஸ்மாக் மதுக்கடைகள் குறைக்கப்பட்ட போதிலும் மது விற்பனை குறையவில்லை. மாறாக எட்டு மடங்கு விற்பனை அதிகரித்துள்ளது.

கடந்த 15 ஆண்டுகளில் டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கை 20 சதவிகிதம் குறைக்கப்பட்டது. 2006 முதல் 2021 வரை தமிழகத்தில் 1,311 மதுக்கடைகள் குறைக்கப்பட்டுள்ளன. 6,736 மதுக்கடைகள் செயல்பட்டு வந்த நிலையில் அவை தற்போது 5,425 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

மதுக்கடைகள் படிப்படியாக குறைக்கப்பட்ட போதிலும் இந்த காலங்களில் மது விற்பனை பல மடங்கு அதிகரித்துள்ளது. இதே காலங்களில் ரூ.4,195 கோடியாக இருந்த மது விற்பனை ரூ.33,746 கோடியாக உயர்ந்துள்ளது. சராசரியாக 20 சதவிகிதம் விற்பனை அதிகரித்துள்ளது. இந்த காலங்களில் 2 சதவிகிதம் முதல் 120 சதவிகிதம் வரை மது விற்பனை உயர்ந்துள்ளது என்று தகவல் உரிமை சட்டத்தின் கீழ் தெரிய வந்துள்ளது. டாஸ்மாக் மது விற்பனை 10 ஆண்டுகளில் இரண்டு மடங்கு அதிகமாக கூடியுள்ளது.

2007இல் உள்நாட்டில் தயாரிக்கும் அயல்நாட்டு மதுவகைகள் 24 லட்சம் பெட்டிகள் விற்பனை ஆகின. (ஒரு பெட்டியில் 48 குவார்ட்டர் பாட்டில்கள்) இது 2021இல் 50 லட்சம் பெட்டியாக உயர்ந்துள்ளது.

மது மீதான ஆயத்தீர்வை மற்றும் வாட் வரி உயர்வு மற்றொரு காரணமாகும் என்று டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். பிரீமியம் வகை மதுபானங்கள் தேவை அதிகரித்து இருப்பதும் மது விற்பனை அதிகரிப்பதற்கு மற்றொரு காரணமாகும் என்கிறார்கள்.

15 ஆண்டுகளுக்கு முன்பு 2 சதவிகிதமாக இருந்த பிரீமியம் வகை மது விற்பனை தற்போது 16 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. சாதாரண மது வகைகளை விட பிரீமியம் மது வகைகளின் விலை அதிகமாக இருப்பதால் விற்பனையின் அளவு அதிகரித்துள்ளது.

-ராஜ்

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

இந்தியாவிலிருந்து ஃபோர்டு வெளியேற முக்கிய காரணம் என்ன?

9 நிமிட வாசிப்பு

இந்தியாவிலிருந்து ஃபோர்டு வெளியேற முக்கிய காரணம் என்ன?

முதுநிலை ஆசிரியர் தேர்வு: முறைகேட்டில் ஈடுபட்டால் ஆயுட்கால ...

3 நிமிட வாசிப்பு

முதுநிலை ஆசிரியர் தேர்வு: முறைகேட்டில் ஈடுபட்டால் ஆயுட்கால தடை!

ஞாயிறு 22 ஆக 2021