மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 22 ஆக 2021

காளான் விலை உயர்வு: விவசாயிகள் மகிழ்ச்சி

காளான் விலை உயர்வு: விவசாயிகள் மகிழ்ச்சி

சமீப காலமாக குன்னூர் பகுதியில் காளான் விலை உயர்ந்து வருகிறது. கிலோ 100 ரூபாய்க்கு விற்ற காளான் தற்போது 300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

நீலகிரி மாவட்டத்தில் தேயிலை விவசாயம் பிரதானமாக உள்ளது. இதற்கு அடுத்தபடியாக மலைக்காய்கறிகளை விவசாயிகள் பயிரிட்டு வருகின்றனர். ஒரு சில விவசாயிகள் காளான் சாகுபடியிலும் ஈடுபட்டுள்ளனர். அதன்படி குன்னூர், கோத்தகிரி, எல்ல நள்ளி, அரக்காடு போன்ற பகுதிகளில் காளான் சாகுபடி அதிகளவில் செய்யப்படுகிறது.

பொதுவாக நீலகிரி மாவட்டத்தில் மொட்டு காளான் அதிகளவில் விளைவிக்கப்படுகிறது. மாவட்டத்தின் காலநிலை மொட்டு காளான் வளர்ச்சிக்கு சாதகமாக இருப்பதால், அவை இயற்கையாகவே வளர்கிறது. வளர்ந்த காளானை ஐந்து நாட்கள் வரை வைக்கலாம். சாகுபடி செய்த 40 நாட்களில் வளரும் தன்மை கொண்டது, காளான் ஆகும்.

மழைக்காலத்தில் காளான் வளர்ச்சி அதிகரித்து இருக்கும். கோடைக்காலமான ஏப்ரல், மே மாதங்களில் வெப்பம் அதிகமாக இருப்பதால், காளான் வளர்ச்சி குறைவாக இருக்கும். மேலும் நோய் பாதிப்பும் ஏற்படுவதால், மகசூல் குறைவாக இருக்கும்.

தற்போது சுப முகூர்த்த நாட்கள் மற்றும் ஓணம் பண்டிகை என விஷேச நாட்களாக இருப்பதால் காளானுக்கு நுகர்வு அதிகரித்துள்ளது. மேலும் கொரோனா பரவல் காரணமாக பெரும்பாலான சிறு விவசாயிகள் காளான் சாகுபடியில் ஈடுபடவில்லை. இதனால் காளான் உற்பத்தி குறைவாக உள்ளது. இதனால் காளான் விலை உயர்ந்து வருகிறது. அதாவது தற்போது கிலோவுக்கு 160 ரூபாய் முதல் 300 ரூபாய் வரை விலை கிடைக்கிறது. இதனால் காளான் சாகுபடி செய்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சென்னை போன்ற பெருநகரங்களில் பாக்கெட்டுகளில் கிடைக்கும் 200 கிராம் காளான் ரூ.40 முதல் 50 வரை விற்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

-ராஜ்

வேலைவாய்ப்பு : தமிழக மருத்துவ துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : தமிழக மருத்துவ  துறையில் பணி!

ஜல்லிக்கட்டு: காளை முட்டி உரிமையாளர் பலி!

3 நிமிட வாசிப்பு

ஜல்லிக்கட்டு: காளை முட்டி உரிமையாளர் பலி!

வேலைவாய்ப்பு: டிஆர்டிஓ நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஆர்டிஓ நிறுவனத்தில் பணி!

ஞாயிறு 22 ஆக 2021