மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 22 ஆக 2021

மெட்ரோ நேரம் நீட்டிப்பு: மாஸ்க் அணியாவிட்டால் அபராதம்!

மெட்ரோ நேரம் நீட்டிப்பு: மாஸ்க் அணியாவிட்டால் அபராதம்!

ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் மெட்ரோ ரயில் இயங்கும் நேரமும் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதே சமயத்தில் பயணிகள் சரியாக முகக்கவசம் அணியவில்லை எனில் ரூ.200 அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் இன்று (ஆகஸ்ட் 22) வெளியிட்ட செய்திக்குறிப்பில், “பயணிகளின் கோரிக்கையை ஏற்றுச் சென்னை மெட்ரோ ரயில் சேவை நாளை ( ஆகஸ்ட் 23) முதல் வார நாட்களில் ( திங்கள் முதல் சனி வரை) காலை 5.30 முதல் இரவு 11 மணிவரை நீட்டித்து இயக்கப்படும். காலை 8 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் 8 மணி வரையிலும் 5 நிமிடங்களுக்கு ஒரு ரயில் இயக்கப்படும்.

ஞாயிறு மற்றும் அரசு பொது விடுமுறை நாட்களில் காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை 10 நிமிட இடைவெளியில் இயங்கும்.

மெட்ரோ ரயில்களில் முகக்கவசம் அணியாவிட்டாலோ அல்லது சரியாக அணியாவிட்டாலோ ரூ.200 அபராதம் விதிக்கப்படும் என மெட்ரோ நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஏற்கனவே முகக்கவசம் அணியாமல் பயணம் செய்த 176 பயணிகளிடமிருந்து ரூ.35,200 வசூலிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

தத்துப் பிள்ளைகள் எப்படி இருக்க வேண்டும்?

12 நிமிட வாசிப்பு

தத்துப் பிள்ளைகள் எப்படி இருக்க வேண்டும்?

பிஸ்கட், சோப்பு, ஷாம்பூ: 4 முதல் 33 சதவிகிதம் வரை விலை உயர்கிறது! ...

3 நிமிட வாசிப்பு

பிஸ்கட், சோப்பு, ஷாம்பூ: 4 முதல் 33 சதவிகிதம் வரை  விலை   உயர்கிறது!

நாளை முதல் ஜியோ கட்டணங்களும் உயர்கிறது!

3 நிமிட வாசிப்பு

நாளை முதல் ஜியோ கட்டணங்களும் உயர்கிறது!

ஞாயிறு 22 ஆக 2021