மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 22 ஆக 2021

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - உணவு அலர்ஜி... தடுப்பூசி போடலாமா?

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - உணவு அலர்ஜி... தடுப்பூசி போடலாமா?

இந்தியாவில் பலரும் தடுப்பூசி போட்டுக்கொள்ளும் நிலையில், கொரோனா தொடர்பாகவும், அது ஏற்படுத்தும் பிற உடல்நல பாதிப்புகள் மற்றும் உணவுகள் தொடர்பாகவும் அனைவர் மனதிலும் பல்வேறு கேள்விகள் எழுகின்றன. குறிப்பாக, ‘கோதுமை, ரவை, மைதா சாப்பிட்டால் அலர்ஜி; நான் கோவிட் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாமா?’, ‘எனக்கு உணவு அலர்ஜி உள்ளது. சருமத்தில் தடிப்பு, குறை ரத்த அழுத்தம், தலைச்சுற்றல் போன்றவை ஏற்படுகின்றன. இந்த நிலையில் நான் கோவிட் தடுப்பூசி எடுத்துக்கொள்ளலாமா?’ - இப்படிப்பட்ட கேள்விகளுக்கான பதில் இதோ...

“உணவுகளால் ஏற்படும் ஒவ்வாமை பக்க விளைவுகளுக்கும், பலவித மருந்துகளால் ஏற்படும் ஒவ்வாமைக்கும் கோவிட் தடுப்பூசிக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. இப்படிப்பட்ட தேவையில்லாத பயம் காரணமாகவோ, ஆதாரமற்ற தகவல்களைக் கேள்விப்பட்டோ உங்கள் உயிரைக் காக்கக்கூடிய கோவிட் தடுப்பூசியைப் போட்டுக்கொள்வதைத் தவிர்ப்பது விவேகமான செயல் அல்ல.

ஏற்கெனவே ஏதோ தடுப்பூசி போட்டுக்கொண்டு அதனால் பயங்கரமான பக்க விளைவு ஏற்பட்டு தீவிர காய்ச்சல், நரம்பு சம்பந்தப்பட்ட பாதிப்புகள், கைகால் செயலிழப்பு, மூளைக் காய்ச்சலுக்கான அறிகுறிகள் போன்றவை ஏற்பட்டவர்கள் மட்டும் கோவிட் தடுப்பூசி போட்டுக்கொள்வதைத் தவிர்த்தால் போதும். லட்சத்தில் ஒருவருக்கு எந்தத் தடுப்பூசி போட்டாலும் ‘அக்யூட் குலியன் பாரி சிண்ட்ரோம்’ (Acute Guillain-Barre syndrome - GBS) எனும் அபூர்வ பிரச்னை ஏற்படலாம்.

அதாவது, பலவிதமான தசைகள், பலவிதமான நரம்புகளின் செயல்பாடு பாதிக்கப்பட்டு, மூச்சுவிடக்கூட சிரமம் ஏற்படும். சிலருக்கு கால் நரம்புகள் செயலிழந்து, இளம்பிள்ளை வாதம் வந்தவர்கள் போல நடக்கவே முடியாமல் அவதிப்படுவார்கள். உதரவிதானம் செயலிழந்து மூச்சுவிட முடியாமல் செய்து, வென்டிலேட்டர் சிகிச்சை தேவைப்படும் அளவுக்கு தீவிரநிலைக்குக் கொண்டு செல்லலாம். இது கொரோனா தடுப்பூசிக்கு மட்டுமல்ல, எல்லாவித தடுப்பூசிகளாலும் லட்சத்தில் ஒருவருக்கு ஏற்படக்கூடிய தீவிரமான பக்க விளைவு. மிக மிக அரிதானது என்பதையும் மறக்க வேண்டாம்.

எந்த விஷயத்திலும் ரிஸ்க் வெர்சஸ் பெனிஃபிட் என்ற ஒன்றை கவனிக்க வேண்டியது முக்கியம். ஒரு விஷயத்தால் ஏற்படும் நன்மை என்ன, இழப்பு என்ன என யோசிக்கும்போது, லட்சத்தில் ஒருவருக்கு பக்க விளைவு ஏற்படுவதை நினைத்து பயந்துகொண்டு, உயிர் காக்கும் கொரோனா தடுப்பூசியைத் தவிர்ப்பது ஆபத்தானது. எனவே, நீங்கள் எந்த பயமும் இன்றி கோவிட் தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள்” என்கிறார்கள் அலர்ஜி சிறப்பு மருத்துவர்கள்.

நேற்றைய ரெசிப்பி: ட்ரைபாடு (முக்காலி) தோசை

மூன்று வாரத்திற்கு மேல் இருமல் இருந்தால் டிபி பரிசோதனை அவசியம்! ...

5 நிமிட வாசிப்பு

மூன்று வாரத்திற்கு மேல் இருமல் இருந்தால் டிபி பரிசோதனை அவசியம்!

பெரியார் சிலை அவமதிப்பு: இருவர் மீது குண்டாஸ்!

3 நிமிட வாசிப்பு

பெரியார் சிலை அவமதிப்பு: இருவர் மீது குண்டாஸ்!

வேலைவாய்ப்பு : அஞ்சல் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : அஞ்சல் துறையில் பணி!

ஞாயிறு 22 ஆக 2021