மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 21 ஆக 2021

சிவசங்கர் பாபா வழக்கின் விசாரணை அதிகாரி மாற்றம்!

சிவசங்கர் பாபா வழக்கின் விசாரணை அதிகாரி மாற்றம்!

பாலியல் வழக்கில் சிறையில் உள்ள சிவசங்கர் பாபா வழக்கின் விசாரணை அதிகாரி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்தில் உள்ள சுஷில் ஹரி பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா, அப்பள்ளியில் படித்த மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் கடந்த ஜூன் 16ஆம் தேதி கைது செய்யப்பட்டார். இதையடுத்து அவர் மீது 3 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

மூன்று வழக்குகளின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சிவசங்கர் பாபாவிடம் தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதுமட்டுமில்லாமல், மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் உடந்தையாக இருந்ததாகக் கூறப்படும் அப்பள்ளி ஆசிரியைகளிடமும் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையில் தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி போக்சோ நீதிமன்றம், முதன்மை அமர்வு நீதிமன்றம் மற்றும் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

இந்த வழக்கு தொடர்பாக, செங்கல்பட்டு நீதிமன்றத்தில் சிவசங்கர் பாபா மீது, 300 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கையை சிபிசிஐடி போலீசார் தாக்கல் செய்தனர்.

வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், 2011, 2012 மற்றும் 2013 ஆம் ஆண்டுகளில் பள்ளியில் படித்த மாணவிகளை சிவசங்கர் பாபா வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், சிவசங்கர் மீதான இரண்டாவது வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், இந்த வழக்கின் விசாரணை அதிகாரியான சிபிசிஐடி டிஎஸ்பி குணவர்மன் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். சென்னை மாநகராட்சியின் விஜிலென்ஸ் தடுப்பு பிரிவு டிஎஸ்பியாக குணவர்மன் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

குணவர்மன் தலைமையிலான தனிப்படை பிரிவினர்தான் தலைமறைவாக இருந்த சிவசங்கரை கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

-வினிதா

இந்தியாவிலிருந்து ஃபோர்டு வெளியேற முக்கிய காரணம் என்ன?

9 நிமிட வாசிப்பு

இந்தியாவிலிருந்து ஃபோர்டு வெளியேற முக்கிய காரணம் என்ன?

வீட்டுக்கடன் வட்டியைக் குறைக்கும் எஸ்பிஐ!

2 நிமிட வாசிப்பு

வீட்டுக்கடன் வட்டியைக் குறைக்கும் எஸ்பிஐ!

வேலைவாய்ப்பு: பெல் நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: பெல் நிறுவனத்தில் பணி!

சனி 21 ஆக 2021