மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 21 ஆக 2021

குழந்தையின் சிகிச்சைக்காக ஒலிம்பிக் பதக்கத்தை ஏலம்விட்ட வீராங்கனை!

குழந்தையின் சிகிச்சைக்காக ஒலிம்பிக் பதக்கத்தை ஏலம்விட்ட வீராங்கனை!

நடந்து முடிந்த டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பெண்களுக்கான ஈட்டி எறிதலில் போலந்து நாட்டை சேர்ந்த 25 வயது வீராங்கனை மரியா ஆந்த்ரேஜிக் வெள்ளிப்பதக்கம் வென்றார். ஒலிம்பிக் போட்டி முடிந்து இரண்டு வாரங்களுக்குள் அவர் தனது வாழ்நாள் கனவாக கைப்பற்றிய பதக்கத்தை ஏலம் விட்டு இருக்கிறார்.

போலந்து நாட்டை சேர்ந்த எட்டு மாத குழந்தையின் சிக்கலான அவசர இதய அறுவை சிகிச்சைக்கு நிதி இல்லாமல் தவித்த தம்பதி ஃபேஸ்புக் மூலம் விடுத்திருந்த வேண்டுகோளை பார்த்த அவர் ஆன்-லைன் மூலம் தனது வெள்ளிப்பதக்கத்தை ஏலத்தில் விட்டார்.

அதை அங்குள்ள ஒரு தனியார் நிறுவனம் ரூ.93 லட்சத்துக்கு எடுத்தது. அந்தப் பணத்தை அவர் அறுவை சிகிச்சை செய்ய இருக்கும் குழந்தையின் பெற்றோருக்கு அனுப்பி வைத்து வியக்க வைத்துள்ளார்.

அதே நேரத்தில் பதக்கத்தை ஏலத்தில் வாங்கிய நிறுவனம் மரியாவின் பரந்த மனதை பாராட்டி இருப்பதுடன் அந்தப் பதக்கத்தை அவரிடமே திரும்ப வழங்க முடிவு செய்துள்ளது.

-ராஜ்

வேலைவாய்ப்பு: மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் பணி!

2 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் பணி!

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - தினமும் மட்டன், முட்டை சாப்பிடலாமா? ...

5 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - தினமும் மட்டன், முட்டை சாப்பிடலாமா?

இன்று முதல் இந்தியாவில் இருந்து கனடாவுக்கு நேரடி விமானம்!

4 நிமிட வாசிப்பு

இன்று முதல் இந்தியாவில் இருந்து கனடாவுக்கு நேரடி விமானம்!

சனி 21 ஆக 2021