மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 21 ஆக 2021

31ஆம் தேதிக்குள் வருங்கால வைப்பு நிதி கணக்குடன் ஆதார் எண் இணைப்பு அவசியம்!

31ஆம் தேதிக்குள் வருங்கால வைப்பு நிதி கணக்குடன் ஆதார் எண் இணைப்பு அவசியம்!

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி கணக்குடன், ஆதார் எண் இணைப்பை வருகிற 31ஆம் தேதிக்குள் அவசியம் இணைக்க வேண்டும் என்று வருங்கால வைப்பு நிதி அலுவலகம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக, மண்டல வருங்கால வைப்பு நிதி ஆணையர் அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், மத்திய அரசின் சமூக பாதுகாப்புச் சட்டம், பிரிவு 142இன்படி, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில் உறுப்பினர்களாக இருப்பவர்கள் தங்களுடைய வருங்கால வைப்பு நிதி கணக்கில் இருந்து பணம் எடுத்தல், ஓய்வூதியம் பெறுதல், காப்பீட்டு பலன்களை பெற, ஆதார் எண்ணை, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி கணக்குடன் இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, நிறுவன உரிமையாளர்கள் தங்களுடைய ஊழியர்களின் ஆதார் எண்ணை, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி கணக்குடன் கட்டாயம் இணைக்க வேண்டும். இந்த இணைப்பை மேற்கொள்ள வருங்கால வைப்பு நிதி அலுவலகம் வருகிற 31ஆம் தேதி வரை அவகாசம் வழங்கியிருக்கிறது.

இதன் மூலம் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி உறுப்பினர்கள் மற்றும் அவர்களை சார்ந்தவர்கள் தங்களுக்கு பண உதவி தேவைப்படும்போது, அவர்களே எளிதாக தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் சேவையை எளிதாக பயன்படுத்தி கொள்ள முடியும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-ராஜ்

இந்தியாவிலிருந்து ஃபோர்டு வெளியேற முக்கிய காரணம் என்ன?

9 நிமிட வாசிப்பு

இந்தியாவிலிருந்து ஃபோர்டு வெளியேற முக்கிய காரணம் என்ன?

வீட்டுக்கடன் வட்டியைக் குறைக்கும் எஸ்பிஐ!

2 நிமிட வாசிப்பு

வீட்டுக்கடன் வட்டியைக் குறைக்கும் எஸ்பிஐ!

வேலைவாய்ப்பு: பெல் நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: பெல் நிறுவனத்தில் பணி!

சனி 21 ஆக 2021