மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 21 ஆக 2021

பனை மரங்களை வெட்டியவர்கள் கைது!

பனை மரங்களை வெட்டியவர்கள் கைது!

ராமேஸ்வரம் அருகே அனுமதியின்றி 140 பனை மரங்களை வெட்டிய இருவரை போலீசார் இன்று கைது செய்தனர்.

தமிழகத்தின் மாநில மரம் பனை மரம். அதுமட்டுமில்லாமல், இதில் அதிக பயன் தரக் கூடிய நல்ல விஷயங்கள் அதிகம் இருப்பதால் அதை வெட்டக் கூடாது.பனை மரத்தை அதிகளவில் நட வேண்டும். உத்தரவை மீறி வெட்டுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று 2020ஆம் ஆண்டிலே சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டிருந்தது.

தொடர்ந்து, திமுக அரசின் முதல் பட்ஜெட் கூட்டத் தொடரில் முதன் முறையாக ஆகஸ்ட் 14ஆம் தேதி வேளாண்மை துறைக்கு தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், பனைமரங்களை பாதுகாக்கும் நோக்குடன், தமிழகத்தில் 30 மாவட்டங்களில் 76 லட்சம் பனை விதைகளையும் 1 லட்சம் பனங் கன்றுகளையும் முழு மானியத் தொகையுடன் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும். நீர் நிலைகளின் காவலன் என்று அழைக்கப்படும் பனை மரத்தினை, வேரோடு வெட்டி விற்கவும், செங்கல் சூளைகளுக்குப் பயன்படுத்துவதையும் தவிர்க்க வேண்டும். தவிர்க்க முடியாத சூழ்நிலையில் பனைமரங்களை வெட்ட வேண்டியிருந்தால் மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெறவேண்டியது கட்டாயம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், ராமேஸ்வரத்தில் அனுமதின்றி 140 பனைமரங்கள் வெட்டப்பட்டுள்ளன.

ராமேஸ்வரம் அருகே கடுக்காய் வலசை கிராமத்தைச் சேர்ந்தவர் ரவிசங்கர். இவருக்கும், இவரது உறவினர்களுக்கும் சாத்தக்கோன் வலசை அய்யனார் கோயில் அருகேயுள்ள 14 ஏக்கர் பனந்தோப்பில் சுமார் 1,200க்கும் மேற்பட்ட பனை மரங்கள் உள்ளன.

நேற்று(ஆகஸ்ட் 20) மாலை ரவிசங்கர் தனது தோப்புக்கு சென்றுபார்த்தபோது, 140 பனை மரங்கள் வெட்டப்பட்டிருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

இந்த சம்பவம் குறித்து ரவிசங்கர் உடனடியாக, உச்சிப்புளி காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், நாகாட்சியைச் சேர்ந்த ராஜேந்திரன் (53), தேவிபட்டினத்தைச் சேர்ந்த அப்புசாமி (50), உச்சிப்புளியைச் சேர்ந்த காத்தமுத்து (30) ஆகியோர், பனை மரங்களை வெட்டியது தெரியவந்தது.

பனைமரம் வெட்டியது தொடர்பாக, இன்று(ஆகஸ்ட் 21) ராஜேந்திரன், அப்புசாமி ஆகியோரை கைது செய்த போலீசார் காத்தமுத்துவைத் தேடி வருகின்றனர்.

-வினிதா

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்! ...

2 நிமிட வாசிப்பு

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்!

இந்துக்களை மட்டுமே நியமிக்க முடியும்: தமிழ்நாடு அரசு!

5 நிமிட வாசிப்பு

இந்துக்களை மட்டுமே நியமிக்க முடியும்: தமிழ்நாடு அரசு!

சனி 21 ஆக 2021