மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 21 ஆக 2021

வீடுகளுக்கே சென்று தடுப்பூசி: மாநகராட்சியின் திட்டம்!

வீடுகளுக்கே  சென்று தடுப்பூசி: மாநகராட்சியின் திட்டம்!

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் வசிக்கும் 80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வீடுகளுக்கே சென்று தடுப்பூசி செலுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் கொரோனா பரவல் குறைந்து வந்தாலும், மூன்றாவது அலை ஏற்படுவதை தடுக்க பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.அதன் ஒரு பகுதியாக டிசம்பர் மாதத்திற்குள் 18வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தியாக வேண்டும் என்ற இலக்கை முன்னிறுத்தி தடுப்பூசி போடும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தடுப்பூசியை செலுத்திக் கொள்வதன் மூலம் தீவிர நோய் தொற்று, மருத்துவமனையில் அனுமதி , மரணம் போன்றவற்றை தவிர்க்க முடியும் என்று மருத்துவ நிபுணர்கள் கூறி வருகின்றனர்.

மக்களிடையே தடுப்பூசி போடுவதில் முன்பு இருந்த ஆர்வம், தற்போது மந்தமாக காணப்படுகிறது. இருப்பினும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மூலம் தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா தொற்று பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கவும், பரவலை கட்டுப்படுத்தவும் மாநகராட்சியின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சென்னையில் மாற்றுத்திறனாளிகள் உயர் ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோயாளிகள், கர்ப்பிணி தாய்மார்கள்,பாலூட்டும் பெண்கள் ஆகியோர்களுக்கு சிறப்பு கவனம் செலுத்தி தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

அதுபோன்று 80 வயதுக்கு மேற்பட்டவர்களின் வீடுகளுக்கே சென்று தடுப்பூசி போட முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, தடுப்பூசி போட்டுக் கொள்ள விரும்புவோர்கள் 044 2538 4520 மற்றும் 044-4812 2300 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்தால் அவர்களின் இருப்பிடங்களுக்கே சென்று தடுப்பூசி செலுத்தப்படும். குடிசைப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு சிறப்பு கவனம் செலுத்தி கொரோனா தடுப்பூசி செலுத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தற்போதுவரை 25,14,228 பேருக்கு முதல் தவணை தடுப்பூசியும், 10,54,704 பேருக்கு இரண்டாம் தவணை தடுப்பூசியும் என மொத்தம் 35,68,932 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

மழை நீர் தேங்காமல் இருக்க உடனடி நடவடிக்கையாக மழைநீர் வடிகால்களை தூர்வாரும் பணிகளும் முடுக்கிவிடப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

-வினிதா

வேலைவாய்ப்பு: பெல் நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: பெல் நிறுவனத்தில் பணி!

வீட்டுக்கடன் வட்டியைக் குறைக்கும் எஸ்பிஐ!

2 நிமிட வாசிப்பு

வீட்டுக்கடன் வட்டியைக் குறைக்கும் எஸ்பிஐ!

கொரோனா மூன்றாவது அலை: நிபுணர்களின் கருத்து!

4 நிமிட வாசிப்பு

கொரோனா மூன்றாவது அலை: நிபுணர்களின் கருத்து!

சனி 21 ஆக 2021