மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 21 ஆக 2021

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் : ஜீயர் கண்டனம்!

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் :  ஜீயர் கண்டனம்!

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற திட்டத்தை வன்மையாக கண்டிக்கிறேன் என்று ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் திட்டத்தின் மூலம், முறையாக பயிற்சி பெற்ற பிராமணர் அல்லாதவர்கள் உட்பட 58 பேருக்கு கடந்த 14ஆம் தேதி தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் பணி நியமன ஆணையை வழங்கினார். பணி ஆணையை பெற்ற அர்ச்சகர்கள் சந்தோஷத்துடன் தங்கள் பணியை தொடங்கி செய்து வருகின்றனர்.

இதற்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தரும் நிலையில், சிலர் இதற்கு எதிராக தவறாக பிரச்சாரம் செய்து வருகின்றனர். கோயில்களில் ஏற்கனவே பணியிலிருந்தவர்களை தூக்கிவிட்டு புதிதாக அர்ச்சகர்கள் நியமிக்கப்பட்டதாகவும் செய்திகள் வெளியானது. இதுகுறித்து சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், கோயில்களிலிருந்து யாரும் வெளியேற்றப்படவில்லை. முறையாக பயிற்சி பெற்றவர்கள்தான் அர்ச்சகர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர் என்று விளக்கம் அளித்தார்.

இதுகுறித்து இன்று(ஆகஸ்ட் 21) வீடியோ வெளியிட்ட ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர்,” தமிழ்நாடு அரசின் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற திட்டத்தை வன்மையாக கண்டிக்கிறேன். தமிழ்நாட்டின் பாரம்பரியமிக்க அனைத்து கோயில்களிலும் ஆகம முறைப்படி பூஜைகள் நடைபெற வேண்டும். அதுபோன்று இந்து அறநிலைய துறை கோயில்களின் நடைமுறைகளை மாற்றுவதற்கு எந்த உரிமையும் கிடையாது. இது உச்ச நீதிமன்ற தீர்ப்பில் கூட உள்ளது. பாரம்பரியமான சம்பிரதாயத்தை மாற்றுவது தமிழக அரசுக்கு நல்லது அல்ல. இந்த அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் ரத்து செய்ய வேண்டும்” என்று கூறினார்.

-வினிதா

நெல்லை - தென்காசி நான்கு வழிச்சாலை: வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் ...

3 நிமிட வாசிப்பு

நெல்லை - தென்காசி நான்கு வழிச்சாலை: வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் நடப்படும் மரங்கள்!

தங்கப் பத்திரம் விற்பனை: இந்திய அளவில் நாமக்கல் கோட்டம் முதலிடம்! ...

3 நிமிட வாசிப்பு

தங்கப் பத்திரம் விற்பனை: இந்திய அளவில் நாமக்கல் கோட்டம் முதலிடம்!

மணிகண்டன் மரணம்: வெளியான சிசிடிவி காட்சிகள்!

4 நிமிட வாசிப்பு

மணிகண்டன் மரணம்: வெளியான சிசிடிவி காட்சிகள்!

சனி 21 ஆக 2021