மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 21 ஆக 2021

செங்கல்பட்டு மருத்துவமனையின் மேற்கூரை இடிந்து விழுந்தது!

செங்கல்பட்டு மருத்துவமனையின் மேற்கூரை இடிந்து விழுந்தது!

செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் தாய்-சேய் நலப்பிரிவில் திடீரென மேற்கூரை இடிந்து விழுந்தது தொடர்பாக உதவி மருத்துவ அலுவலர் தலைமையில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

செங்கல்பட்டு அரசு தலைமை மருத்துவமனையில் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பெண்கள், மகப்பேறுக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த மருத்துவமனையில் இரண்டு கட்டடம் உள்ளது. அதில் பழைய கட்டடத்தில் உள்ள தாய்-சேய் நலப்பிரிவில் ஒருபகுதியில் மேற்கூரை இடிந்து விழுந்தது. இதில் யாருக்கும் எந்த சேதமும் ஏற்படவில்லை. அதிர்ஷ்டவசமாக வார்டில் இருந்த தாய்மார்கள், குழந்தைகள் உயிர் தப்பினர். தற்போது அனைவரும் வேறு கட்டடத்துக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

அந்த பிரிவில் மேற்கூரை முழுவதுமே சேதமாகியிருந்தால் அதை தெர்மாகோலை வைத்து மறைத்து வைத்துள்ளனர். இந்நிலையில் தெர்மாகோல் ஷீட்டை உடைத்துக்கொண்டு மேற்கூரையின் ஒருபகுதி இடிந்து படுக்கையில் விழுந்துள்ளது.

இந்த சம்பவத்தால் மருத்துவர்களுக்கும்,அங்கிருந்த பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

தற்போது இந்த சம்பவம் தொடர்பாக உதவி மருத்துவர் அலுவலர் ஆறுமுகம் தலைமையிலான குழு விசாரணை நடத்தி வருகிறது.

இதுபோன்ற தொடர்ச்சியான சம்பவங்களால், கட்டடங்களின் உறுதிதன்மை குறித்து பொதுமக்களிடையே அச்சமும் கேள்வியும் ஏற்பட்டுள்ளது.

-வினிதா

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - தினமும் மட்டன், முட்டை சாப்பிடலாமா? ...

5 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - தினமும் மட்டன், முட்டை சாப்பிடலாமா?

சேலைகளைத் துவைக்க உத்தரவு: நீதிபதிக்குத் தடை!

3 நிமிட வாசிப்பு

சேலைகளைத் துவைக்க உத்தரவு: நீதிபதிக்குத் தடை!

சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு பிரதமர் மோடி பாராட்டு!

3 நிமிட வாசிப்பு

சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு பிரதமர் மோடி பாராட்டு!

சனி 21 ஆக 2021