மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 21 ஆக 2021

கலை, அறிவியல் கல்லூரிகளில் கலந்தாய்வை தொடங்க உத்தரவு!

கலை, அறிவியல் கல்லூரிகளில் கலந்தாய்வை தொடங்க உத்தரவு!

தமிழகத்தில் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான பணிகளை தொடங்க கல்லூரி கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள 143 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2021-22ஆம் கல்வியாண்டில் இளநிலை பட்டப்படிப்பு முதலாமாண்டு மாணவர்களுக்கான சேர்க்கை விண்ணப்பங்கள் கடந்த ஜூலை 26ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை பெறப்பட்டன. மேலே கூறப்பட்ட கல்லூரிகளில் ஒரு லட்சத்து 20 ஆயிரம் இடங்கள் உள்ளன. ஆனால், சுமார் மூன்று லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

இந்நிலையில் கல்லூரிக் கல்வி இயக்குநர் அரசு கல்லூரி முதல்வர்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அதில், இளங்கலை படிப்பில் சேர்வதற்கான மாணவர்களின் விண்ணப்பங்கள் இணையதளத்தில் உள்ளன. அதனை அரசு கல்லூரியின் முதல்வர்கள் பதிவிறக்கம் செய்து மாணவர் சேர்க்கையை தொடங்க வேண்டும்.

மாணவர்களின் பனிரெண்டாம் வகுப்பு மதிப்பெண்களை அரசுத் தேர்வுத்துறையின் மூலம் சரிபார்த்து, அதன் உண்மைத்தன்மை அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும். பனிரெண்டாம் வகுப்பு சான்றிதழ், இதர சான்றிதழை சமர்ப்பித்த பின்னரே சேர்க்கையை உறுதி செய்ய வேண்டும்.

வன்னியர்களுக்கான 10.5% இடஒதுக்கீட்டை கடைபிடிக்க வேண்டும். விதவைகள், நாட்டுக்காக உயிர் தியாகம் செய்தோரின் பிள்ளைகளுக்கு மாணவர் சேர்க்கையில் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்.

மாணவர்களின் தரவரிசைப் பட்டியலை சரிபார்த்து, கல்லூரியின் தகவல் பலகையில் ஒட்ட வேண்டும். கலந்தாய்வை, ஆகஸ்ட் 23ஆம் தேதி தொடங்கி, செப்டம்பர் 3ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும். மாணவர்களை கொரோனா தொற்று பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி ஆன்லைன் அல்லது நேரில் வரவைத்து சேர்க்கை நடத்தலாம். மாணவர்கள் சேர்க்கையின்போது சமூக இடைவெளி கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்.

மாணவர் சேர்க்கை குறித்த விவரங்களை மாணவர்களுக்கு செல்போன்,மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்த வேண்டும். ஆன்லைன் மூலம் விண்ணப்பித்த மாணவர்களிடம் அச்சிடப்பட்ட விண்ணப்பத்தை, சேர்க்கையின்போது அளித்து பூர்த்தி செய்து பெறவேண்டும். மாணவர் ஒரு பாடப்பிரிவிற்கு விண்ணப்பம் செய்திருந்து, அந்த இடங்கள் நிரம்பிவிட்டால் வேறு பாடப்பிரிவில் விதிகளை பின்பற்றி சேர்த்து கொள்ளலாம். மாணவர்களை கணினிப் பயிற்சி, திறன் மேம்பாட்டு பயிற்சியில் சேர்வதற்கு ஊக்குவிக்க வேண்டும்.

கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதலாமாண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் தொடங்கும் தேதி, பின்னர் அறிவிக்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

-வினிதா

முதன்முறையாக திருச்செந்தூர் கோயிலுக்குள் புகுந்த மழைநீர்! ...

2 நிமிட வாசிப்பு

முதன்முறையாக திருச்செந்தூர் கோயிலுக்குள் புகுந்த மழைநீர்!

ஓடும் ரயிலில் சாகசம்: எஸ்.பி அட்வைஸ்!

3 நிமிட வாசிப்பு

ஓடும் ரயிலில் சாகசம்: எஸ்.பி அட்வைஸ்!

புதிய ஆட்சியரின் வாக்குறுதி!

3 நிமிட வாசிப்பு

புதிய ஆட்சியரின் வாக்குறுதி!

சனி 21 ஆக 2021