மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 20 ஆக 2021

பத்தாம் வகுப்பு தேர்வு எழுதிய முன்னாள் முதல்வர்!

பத்தாம் வகுப்பு தேர்வு எழுதிய முன்னாள் முதல்வர்!

மாநிலத்தின் முன்னாள் முதல்வர் பத்தாம் வகுப்பின் ஆங்கிலப் பாடத்தேர்வை எழுதி, அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.

அரியானா மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரும், இந்திய தேசிய லோக் தளம் கட்சியின் தலைவருமான ஓம் பிரகாஷ் சவுதாலா நேற்று (ஆகஸ்ட் 19) பத்தாம் வகுப்பு ஆங்கில பாடத்துக்கான தேர்வை எழுதியுள்ளார். அவருக்கு தற்போது 86 வயதாகிறது. ஆங்கிலப் பாடத்தேர்வுக்கு நன்றாக தயாராகியதாகவும், நல்ல மதிப்பெண் பெறுவேன் என்றும் சவுதாலா தெரிவித்துள்ளார்.

“நான் திஹார் ஜெயிலில் இருக்கும்போது பத்தாம் வகுப்பு தேர்வு எழுதினேன். எனினும், ஆங்கிலப் பாடத்துக்கான தேர்வை மட்டும் எழுதவில்லை. கல்வி வாரியம் எனக்குப் பாடத்திட்டத்தின் ஒரு பகுதியை வழங்கியது. ஆகவே, நான் தற்போது தேர்வு எழுதியுள்ளேன்.

இளம் வயதில் ஆங்கிலம் குறித்து மிகப்பெரிய அளவில் கற்றுக் கொள்ளவில்லை. பின்னர் ஆங்கிலத்தைப் புரிந்து கொண்டேன். தற்போது எழுதியுள்ளேன்” என்று கூறியுள்ளார் சவுதாலா.

ஜூனியர் அளவிலான ஆசிரியர்கள் பணியமர்த்தல் வழக்கில் சவுதாலா பத்தாண்டுகள் சிறைத்தண்டனை பெற்று ஜெயிலில் அடைக்கப்பட்டார். கடந்த 2013ஆம் ஆண்டு ஜெயிலில் அடைக்கப்பட்ட சவுதாலா கடந்த மாதம் விடுதலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

-ராஜ்

வேலைவாய்ப்பு : தமிழக மருத்துவ துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : தமிழக மருத்துவ  துறையில் பணி!

ஜல்லிக்கட்டு: காளை முட்டி உரிமையாளர் பலி!

3 நிமிட வாசிப்பு

ஜல்லிக்கட்டு: காளை முட்டி உரிமையாளர் பலி!

வேலைவாய்ப்பு: டிஆர்டிஓ நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஆர்டிஓ நிறுவனத்தில் பணி!

வெள்ளி 20 ஆக 2021