மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 20 ஆக 2021

சிறு தொழில் கடன் சிறப்பு முகாம்கள்!

சிறு தொழில் கடன் சிறப்பு முகாம்கள்!

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக்கழகம் சார்பில் சுய உதவிக்குழுக்களுக்கான சிறு தொழில் கடன் தொடர்பான சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது என செங்கல்பட்டு கலெக்டர் ராகுல்நாத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், ‘தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக்கழகம் சார்பில் மூலம் (டாம்கோ) சுய உதவிக்குழுக்களுக்கான சிறு தொழில் கடன் தொடர்பான சிறப்பு முகாம்கள் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டங்களில் நடக்க உள்ளது.

அதில் முஸ்லிம், கிறிஸ்துவ, சீக்கிய, பார்சி, புத்த, ஜெயின் உட்பட சிறுபான்மையினருக்கு வழங்கப்படும் கல்விக் கடன், தனிநபர் கடன், சுய உதவிக்குழுக்களுக்கான சிறு தொழில் கடன் தொடர்பான சிறப்பு முகாம்கள் ஆகஸ்ட் 24ஆம் தேதி பல்லாவரம், 27ஆம் தேதி மதுராந்தகம், 31ஆம் தேதி செய்யூர், செப்டம்பர் 7ஆம் தேதி செங்கல்பட்டு, 14ஆம் தேதி திருக்கழுக்குன்றம், 17ஆம் தேதி திருப்போரூர், 21ஆம் தேதி தாம்பரம் ஆகிய நாட்களில் அந்தந்த வட்டாட்சியர் அலுவலகங்களில் நடைபெறும்.

எனவே, செங்கல்பட்டு மாவட்டத்தில் வசிக்கும் சிறுபான்மையினர்கள் இந்த முகாம்களில் கலந்து கொண்டு கடன் விண்ணப்பங்களைப் பெற்று, அதனை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் சமர்ப்பிக்கலாம்’ எனக் கூறப்பட்டுள்ளது.

-ராஜ்

மூன்று வாரத்திற்கு மேல் இருமல் இருந்தால் டிபி பரிசோதனை அவசியம்! ...

5 நிமிட வாசிப்பு

மூன்று வாரத்திற்கு மேல் இருமல் இருந்தால் டிபி பரிசோதனை அவசியம்!

பெரியார் சிலை அவமதிப்பு: இருவர் மீது குண்டாஸ்!

3 நிமிட வாசிப்பு

பெரியார் சிலை அவமதிப்பு: இருவர் மீது குண்டாஸ்!

வேலைவாய்ப்பு : அஞ்சல் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : அஞ்சல் துறையில் பணி!

வெள்ளி 20 ஆக 2021