மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 20 ஆக 2021

தண்ணீரின்றி கருகும் நெற்பயிர்கள்: கலங்கும் விவசாயிகள்!

தண்ணீரின்றி கருகும் நெற்பயிர்கள்: கலங்கும் விவசாயிகள்!

திருவாரூர் மாவட்டத்தில் இந்த ஆண்டுக்கான இலக்கையும் தாண்டி 40,448 ஏக்கரில் குறுவை சாகுபடி நடைபெற்றுள்ள நிலையில், திருநெல்வேலி மாவட்டம் அம்பை அருகே நெற்பயிர்கள் தண்ணீரின்றி கருகுவதால், வாகைகுளத்தின் மடைகளைச் சீரமைத்து தண்ணீர் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

அம்பை அருேக வாகைகுளத்துக்கு வடக்கு கோடை மேலழகியான் கால்வாயில் இருந்து கடந்த ஜூன் மாதம் 1ஆம் தேதி பாசனத்துக்காக தண்ணீர் திறந்து விடப்பட்டது. வாகைகுளம் பாசனம் மூலம் சுமார் 450 ஏக்கரில் நெல் பயிரிடப்பட்டது. எனினும் மடைகளைச் சரியாக பராமரிக்காததால், வாகைகுளம் முழுமையாக நிரம்பவில்லை. இதனால் அந்தப் பகுதியில் சுமார் 100 ஏக்கரில் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் தண்ணீரின்றி கருகும் நிலை உள்ளது. இதனால் விவசாயிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.

இதுகுறித்து அந்தப் பகுதி விவசாயிகள், “கோடைக்காலத்தில் வாகைகுளத்தில் இருந்த தண்ணீரை மீன்பாசி குத்தகைக்காக வெளியேற்றியதால் இந்த அவலநிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம். குளத்து பாசனமாக உள்ள இந்தப் பகுதியை சில தனிநபர்கள் கால்வாய் பாசனமாக உருவாக்கியதால் பாதிப்பு ஏற்படுகிறது.

எனவே வாகைகுளத்தில் மடைகளைச் சீரமைத்து தண்ணீரை முறையாக நிரப்பினால்தான் கருகும் நெற்பயிர்களைக் காப்பாற்ற முடியும்” என்று விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

-ராஜ்

தத்துப் பிள்ளைகள் எப்படி இருக்க வேண்டும்?

12 நிமிட வாசிப்பு

தத்துப் பிள்ளைகள் எப்படி இருக்க வேண்டும்?

பிஸ்கட், சோப்பு, ஷாம்பூ: 4 முதல் 33 சதவிகிதம் வரை விலை உயர்கிறது! ...

3 நிமிட வாசிப்பு

பிஸ்கட், சோப்பு, ஷாம்பூ: 4 முதல் 33 சதவிகிதம் வரை  விலை   உயர்கிறது!

நாளை முதல் ஜியோ கட்டணங்களும் உயர்கிறது!

3 நிமிட வாசிப்பு

நாளை முதல் ஜியோ கட்டணங்களும் உயர்கிறது!

வெள்ளி 20 ஆக 2021