மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 20 ஆக 2021

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: ஆணையத்தின் கால அவகாசம் நீட்டிப்பு!

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: ஆணையத்தின் கால அவகாசம் நீட்டிப்பு!

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து விசாரித்து வரும் ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் ஆணையத்துக்கு, மேலும் 6 மாத காலம் அவகாசம் வழங்கியுள்ளது தமிழ்நாடு அரசு.

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையினால் சுற்றுச்சூழல் மாசுபாடு ஏற்படுவதால், அதை மூடக் கோரி அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் தொடர் போராட்டம் நடத்தினர். கடந்த 2018ஆம் ஆண்டில் போராட்டத்தின்100வது நாளில்(மே 22) மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி பேரணியாக சென்ற மக்கள் மீது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 2 பெண்கள் உட்பட 13 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து விசாரிப்பதற்காக ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் ஆணையம் அமைக்கப்பட்டது.

2018 ஜூன் 4ஆம் தேதி ஒருநபர் ஆணையம் விசாரணையை தொடங்கியது. இந்த வழக்கில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர், காயம் அடைந்தவர்கள், பொதுமக்கள், வழக்கறிஞர்கள், சமூக ஆர்வலர்கள் காவலர்கள், உயர் அதிகாரிகள், நடிகர் ரஜினி எனப் பல்வேறு தரப்பினரிடம் விசாரணை நடத்தப்பட்டு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.

இதையடுத்து கடந்த மே 14ஆம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் விசாரணையின் இடைக்கால அறிக்கையை விசாரணை ஆணையத்தின் தலைவர் அருணா ஜெகதீசன் தாக்கல் செய்தார்.

இந்நிலையில் விசாரணை ஆணையத்தின் கால அவகாசத்தை மேலும் 6 மாத காலம் நீட்டித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி, ஆகஸ்ட் 23ஆம் தேதி முதல் 2022, பிப்ரவரி 22ஆம் தேதி வரை அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு மேல் கால அவகாசம் நீட்டிக்கப்படாது எனவும் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

-வினிதா

தத்துப் பிள்ளைகள் எப்படி இருக்க வேண்டும்?

12 நிமிட வாசிப்பு

தத்துப் பிள்ளைகள் எப்படி இருக்க வேண்டும்?

பிஸ்கட், சோப்பு, ஷாம்பூ: 4 முதல் 33 சதவிகிதம் வரை விலை உயர்கிறது! ...

3 நிமிட வாசிப்பு

பிஸ்கட், சோப்பு, ஷாம்பூ: 4 முதல் 33 சதவிகிதம் வரை  விலை   உயர்கிறது!

நாளை முதல் ஜியோ கட்டணங்களும் உயர்கிறது!

3 நிமிட வாசிப்பு

நாளை முதல் ஜியோ கட்டணங்களும் உயர்கிறது!

வெள்ளி 20 ஆக 2021