மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 20 ஆக 2021

மகப்பேறு விடுப்பில் பாகுபாடு கூடாது : நீதிமன்றம் உத்தரவு!

மகப்பேறு விடுப்பில் பாகுபாடு கூடாது : நீதிமன்றம் உத்தரவு!

மகப்பேறு விடுப்பு வழங்குவதில் பணி வரன்முறை செய்யப்பட்ட ஊழியர்களுக்கும், வரன்முறைப்படுத்தப்படாத ஊழியர்களுக்கும் இடையில் எந்த பாகுபாடும் காட்டக்கூடாது என தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

தமிழ்நாட்டில் திருமணமான பெண் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு, 180 நாட்களில் இருந்து 270 நாட்களாக அதிகரித்து, 2016ஆம் ஆண்டு பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை அரசாணை பிறப்பித்தது. இந்த சலுகை, பணி வரன்முறைப்படுத்தப்படாத, தற்காலிக பணியாளர்களுக்கும் நீட்டித்து 2020ஆம் ஆண்டு உத்தரவிடப்பட்டது.

இதுகுறித்து சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் ராஜகுரு, சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கொன்று தாக்கல் செய்திருந்தார். அதில், மாநிலத்தில் பல மாவட்டங்களில் அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும், பணி வரன்முறைபடுத்தப்படாத, தற்காலிக பெண் பணியாளர்கள், மகப்பேறு விடுப்பு வழங்கக் கோரிய விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளது. அவற்றின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை .

பணி வரன்முறைப்படுத்தப்படாத தற்காலிகப் பணியாளர்களுக்கும் மகப்பேறு விடுப்பை ஊதியத்துடன் வழங்க உத்தரவிட வேண்டும். இது தொடர்பான அரசாணையை முறையாக அமல்படுத்த அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கு இன்று(ஆகஸ்ட் 20) தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மகப்பேறு விடுப்பு வழங்குவதில் பணி வரன்முறைப்படுத்தப்பட்ட, வரன்முறைப்படுத்தப்படாத பெண் அரசு ஊழியர்களுக்கு இடையில் எந்தவித பாரபட்சமும் காட்டக்கூடாது என்று அறிவுறுத்திய நீதிபதிகள், ஒரே மாதிரியாக மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

-வினிதா

வேலைவாய்ப்பு : இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

2 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

தீபாவளி போனஸ் : தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்!

3 நிமிட வாசிப்பு

தீபாவளி போனஸ் : தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்!

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

வெள்ளி 20 ஆக 2021