மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 20 ஆக 2021

அனுமதி இல்லாதபோதும் களைகட்டிய திருமணங்கள்!

அனுமதி இல்லாதபோதும் களைகட்டிய திருமணங்கள்!

தமிழ்நாட்டில் ஆவணி மாதத்தின் முதல் முகூர்த்த நாளை முன்னிட்டு இன்று(ஆகஸ்ட் 20) திருமணம் உள்ளிட்ட பல்வேறு சுப நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

கொரோனா பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய கிழமைகளில் கோயில்களில் தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதியில்லை என்று ஏற்கனவே தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது. அதன்படி இன்று அனைத்து கோயில்களும் மூடப்பட்டிருந்தன.

இந்நிலையில், பிரதோஷம், வரலட்சுமி நோன்பு, சுப முகூர்த்த நாள் ஆகியவை இன்று ஒரேநாளில் கடைபிடிக்கப்படுவதால் இன்றைய நாள் சிறப்பானதாக கருதப்பட்டு அனைத்து சுப நிகழ்ச்சிகளும் இன்றே நடந்து வருகின்றன.

அனைத்து கோயில்களும் மூடப்பட்டிருந்தாலும், கோயில் வாசலில் வைத்து பெரும்பாலோனார் திருமணத்தை நடத்தி முடித்துள்ளனர்.

சென்னை வடபழனியில் உள்ள முருகன் கோயில் நடை அடைக்கப்பட்டு இருந்ததால் தெற்கு மற்றும் வடக்கு கோபுர வாசலில் நின்று ஜோடிகள் மாலை மாற்றி திருமணம் செய்துக் கொண்டனர்.

பழனி முருகன் கோயிலிலும் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்பதால், புதுமண தம்பதிகள் வேல் அருகே நின்று திருமணத்தை நடத்தி கொண்டனர்.

மதுரை மாவட்டத்தில் மீனாட்சி அம்மன் கோயில், கள்ளழகர் கோயில், திருப்பரங்குன்றம் முருகன் கோயில் சென்னையில் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில், என அனைத்து கோயில்களிலும் நுழைவு வாயிலில் நின்று பல்வேறு புதுமண தம்பதிகள் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டனர்.

திருமண நிகழ்ச்சிகள் மட்டுமில்லாமல், காவடி எடுத்தல், மொட்டையடித்து காது குத்துதல் போன்ற நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

தமிழ்நாடு முழுவதும் இன்று மட்டுமே சுமார் 100க்கும்மேற்பட்ட திருமணங்கள் நடைபெற்றதாக கூறப்படுகிறது.

ஆனால், திருமணத்திற்கு வந்திருந்த பலரும் முகக்கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை முறையாக கடைபிடிக்காமலும் இருந்ததை புகைப்படங்களில் பார்க்க முடிகிறது. இதனால் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

-வினிதா

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்! ...

2 நிமிட வாசிப்பு

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்!

இலங்கை கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது ஏன்?

5 நிமிட வாசிப்பு

இலங்கை  கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது ஏன்?

வெள்ளி 20 ஆக 2021