மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 20 ஆக 2021

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஆக.21இல் அறிவிப்பு!

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஆக.21இல் அறிவிப்பு!

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் ஆகஸ்ட் 21ஆம் தேதி குறுஞ்செய்தி மூலம் தெரிவிக்கப்படும் என அரசுத் தேர்வுத் துறை இயக்ககம் அறிவித்துள்ளது.

கொரோனா காரணமாக பள்ளிகளில் நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டு,ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இதனால் இந்தாண்டு ப்ளஸ் 2 தேர்வு ரத்து செய்யப்பட்டு, அவர்களுக்கான மதிப்பெண் பட்டியலும் வெளியிடப்பட்டது. அதுபோன்று பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வும் ரத்து செய்யப்பட்டு அனைத்து மாணவர்களும் தேர்ச்சி என்று அறிவிக்கப்பட்டது. அவர்களுக்கான மதிப்பெண் சான்றிதழில் ஒவ்வொரு பாடத்துக்கும் தேர்ச்சி எனப் பதிவிட்டு மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் என அரசு உத்தரவிட்டது.

இந்த நிலையில் அரசு தேர்வுத் துறை இயக்குநர் உஷாராணி நேற்று (ஆகஸ்ட் 19) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ”2020-21ஆம் கல்வியாண்டின் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் ஆகஸ்ட் 21ஆம் தேதி வெளியிடப்படும். தேர்வு முடிவுகள், மாணவர்களின் செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலம் அரசு தேர்வுத் துறையால் ஆகஸ்ட் 21ஆம் தேதி காலை 11 மணிக்கு அனுப்பி வைக்கப்படும்.

மாணவர்கள், தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை ஆகஸ்ட் 23ஆம் தேதி காலை 11 மணி முதல் 31ஆம் தேதி வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

மாணவர்கள் அரசு தேர்வுகள் இயக்ககத்தின் இணையதளத்தில் பதிவு எண், பிறந்த தேதி உள்ளிட்ட விவரங்களை உள்ளீடு செய்து தற்காலிக மதிப்பெண் சான்றிதழைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

-வினிதா

உடல் பருமன்: மாணவி தற்கொலை!

4 நிமிட வாசிப்பு

உடல் பருமன்: மாணவி தற்கொலை!

தஞ்சை மாணவி மரணம்: பள்ளி விளக்கம்!

6 நிமிட வாசிப்பு

தஞ்சை மாணவி மரணம்: பள்ளி விளக்கம்!

மீண்டும் உயரும் கொரோனா!

6 நிமிட வாசிப்பு

மீண்டும் உயரும் கொரோனா!

வெள்ளி 20 ஆக 2021