மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 20 ஆக 2021

கிச்சன் கீர்த்தனா: பாவ் பாஜி தோசை

கிச்சன் கீர்த்தனா: பாவ் பாஜி தோசை

உலகமயமாக்கலினால் கலாச்சார எல்லைகளை எல்லாம் உடைத்துக்கொண்டு உணவு வகைகள் எங்கெங்கும் பரவிக் கிடக்கின்றன. அதனால்தான் அமெரிக்க நகரங்களிலும் நம் ஊர் மசால் தோசை மணமணக்கிறது. மும்பையில் பிரபலமான பாவ் பாஜியும் தோசை வடிவில் அனைவராலும் விரும்பப்படுகிறது.

என்ன தேவை?

சிறுதானிய தோசை மாவு - 2 கரண்டி

குடமிளகாய் (நறுக்கியது) - 25 கிராம்

பெரிய வெங்காயம் (நறுக்கியது) - 20 கிராம்

காலிஃப்ளவர் (வேகவைத்தது) - 30 கிராம்

உருளைக்கிழங்கு மசாலா - 5 டீஸ்பூன்

கரம் மசாலாத்தூள் - 2 டீஸ்பூன்

வெண்ணெய் - ஒரு டீஸ்பூன்

ரெட் சட்னி - ஒரு கரண்டி

சீஸ் - 100 கிராம்

செஸ்வான் சாஸ் - ஒரு டீஸ்பூன்

எப்படிச் செய்வது?

தோசைக்கல்லில் 2 கரண்டி மாவை விட்டு நன்றாகத் தேய்த்துக்கொள்ளவும். பின்னர் நறுக்கிவைத்த வெங்காயம், குடமிளகாய், வேகவைத்த காலிஃப்ளவர், உருளைக்கிழங்கு மசாலா முதலியவற்றை ஒன்றன் பின் ஒன்றை சேர்த்து கரண்டி மூலம் நன்றாகக் கிளறி விட்டு பின் அதில் கரம் மசாலாத்தூள், ரெட் சட்னி, செஸ்வான் சாஸ் சேர்த்து நன்றாகக் கிளறிய பின் தோசை மேல் சீஸைத் துருவி விட்டு, கடைசியாக வெண்ணெய் போட்டு, தட்டில் தோசையின் மேல் உள்ள கிரேவியைத் தனியாகவும் தோசையைத் தனியாகவும் வைத்தால், பாவ் பாஜி தோசை பரிமாறத் தயார்.

சிறுதானிய தோசை மாவு தயாரிக்க...

கேரள சிவப்பரிசியை தேவையான அளவு எடுத்து மாவாக அரைத்துக்கொள்ள வேண்டும். சிறுதானிய வகைகளையும் மாவாக அரைத்து இரண்டையும் சரிபாதி விகிதத்தில் எடுத்து பாத்திரத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி தேவையான அளவு உப்பு போட்டு, தோசைக்கு மாவுக் கரைசலைத் தயார் செய்துகொள்ள வேண்டும்.

மாவு அரைப்பது சிரமமாகத் தோன்றினால் சிவப்பரிசி மாவும் சிறுதானிய வகைகள் மாவும் இரண்டுமே கடைகளில் கிடைக்கின்றன. அவற்றை வாங்கி உப்பு, தண்ணீர் சேர்த்து தயார் செய்யலாம். இரவு தோசை ஊற்றப்போவதாக இருந்தால் காலையிலேயே மாவுக் கரைசலை தயார் செய்து வைத்துக்கொள்ள வேண்டும் அப்போதுதான் புளிப்புத் தன்மை ஏற்பட்டு, தோசையின் சுவை பிரமாதமாக இருக்கும்.

ரெட் சட்னி தயாரிக்க...

கடாயில் சிறிதளவு எண்ணெய்விட்டு சூடானவுடன் தேவையான அளவு பட்டை, லவங்கம் மற்றும் ஏலக்காயைச் சேர்த்து நன்கு வதக்கவும். பின் நறுக்கிவைத்த பெரிய வெங்காயத்தைச் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதங்கியதும் அதில் தக்காளியைச் சேர்த்து வதக்கவும். பிறகு சிறிதளவு வெல்லம் மற்றும் சுவைக்கேற்ப புளி சேர்த்து கிளறி இறுதியாக காய்ந்த மிளகாய் சேர்த்து நன்கு வதக்கி உப்பு சேர்த்து இறக்கினால் ரெட் சட்னி செய்வதற்கான மசாலா கலவை தயார். மிக்ஸியில் சட்னிக்குத் தேவையான அளவு பொட்டுக்கடலையைச் சேர்த்து அத்துடன் தயார் செய்துவைத்த மசாலா கலவையைக்கொட்டி அரைத்தெடுத்தால் வகை வகையான தோசைகளுடன் சேர்க்கும் ரெட் சட்னி தயார்.

நேற்றைய ரெசிப்பி: பாஸ்தா தோசை

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்! ...

2 நிமிட வாசிப்பு

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்!

இலங்கை கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது ஏன்?

5 நிமிட வாசிப்பு

இலங்கை  கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது ஏன்?

வெள்ளி 20 ஆக 2021