மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 19 ஆக 2021

பாரா ஒலிம்பிக்ஸ்: தலைமையேற்கிறார் தமிழக வீரர் மாரியப்பன்

பாரா ஒலிம்பிக்ஸ்: தலைமையேற்கிறார் தமிழக வீரர் மாரியப்பன்

மாற்றுத்திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக்ஸ் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கும் இந்தியக் குழுவின் முதல் பிரிவு நேற்று டோக்கியோ சென்றடைந்தது. இந்த ஆண்டுக்கான பாரா ஒலிம்பிக்ஸ் தொடக்க விழா அணிவகுப்பில் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு தேசிய கொடியை ஏந்திச் செல்ல உள்ளார்.

கோடைக்கால ஒலிம்பிக்ஸைத் தொடர்ந்து பாரா ஒலிம்பிக்ஸ் போட்டிகளையும் ஜப்பான் நடத்துகிறது. அந்த நாட்டு தலைநகர் டோக்கியோவில் வருகிற 24ஆம் தேதி முதல் செப்டம்பர் 5ஆம் தேதி வரை நடைபெறும் போட்டிகளில் பல்வேறு நாடுகளில் இருந்து சுமார் 4,400 பேர் கலந்துகொள்ள உள்ளனர்.

இந்தியாவில் இருந்து 14 பெண்கள் உட்பட 54 பேர் கொண்ட அணி பங்கேற்கிறது. இந்திய அணிக்கு தலைமை ஏற்கும் தமிழ்நாட்டு மாரியப்பன் உள்ளிட்ட அணியின் முதல் குழு நேற்று டெல்லியில் இருந்து டோக்கியோவுக்குச் சென்றது.

முன்னதாக விமான நிலையத்தில் இந்திய விளையாட்டு ஆணையம் சார்பில் நடத்தப்பட்ட பாராட்டு நிகழ்ச்சியில் பேசிய மாரியப்பன், மீண்டும் தங்கம் வென்று நாட்டுக்குப் பெருமை சேர்ப்பேன் என்றார். தொடக்க விழா அணிவகுப்பில் தேசிய கொடியை ஏந்திச் செல்ல இருக்கும் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த மாரியப்பன், இந்தப் பெருமையைப் பெறும் முதல் தமிழக வீரர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் கடந்த ஒலிம்பிக்ஸில் உயரம் தாண்டுதலில் தங்கம் வென்றவர்.

டோக்கியோ செல்வதற்கு முன், இந்தியக் குழுவுடன் பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக உரையாடி வாழ்த்து தெரிவித்தார்.

-ராஜ்

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

இந்தியாவிலிருந்து ஃபோர்டு வெளியேற முக்கிய காரணம் என்ன?

9 நிமிட வாசிப்பு

இந்தியாவிலிருந்து ஃபோர்டு வெளியேற முக்கிய காரணம் என்ன?

முதுநிலை ஆசிரியர் தேர்வு: முறைகேட்டில் ஈடுபட்டால் ஆயுட்கால ...

3 நிமிட வாசிப்பு

முதுநிலை ஆசிரியர் தேர்வு: முறைகேட்டில் ஈடுபட்டால் ஆயுட்கால தடை!

வியாழன் 19 ஆக 2021