மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 19 ஆக 2021

இந்தியாவுக்கான பயணக் கட்டுப்பாடுகளைத் தளர்த்திய இங்கிலாந்து!

இந்தியாவுக்கான பயணக் கட்டுப்பாடுகளைத் தளர்த்திய இங்கிலாந்து!

இந்தியாவுக்கான பயணக் கட்டுப்பாடுகளை இங்கிலாந்து தளர்த்தியுள்ள நிலையில், இந்தியாவில் இருந்து இங்கிலாந்துக்குச் செல்லும் விமான சேவையை பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமான நிறுவனம் அதிகரித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தியதால் கடந்த மே மாதத்தில் இங்கிலாந்து, இந்தியாவுக்குப் பயணக் கட்டுப்பாடு விதித்தது.

மேலும், இங்கிலாந்து நாட்டில் கடந்த ஜூலை 19ஆம் தேதியில் இருந்து ஊரடங்கு தளர்வுகளை பிரதமர் ஜான்சன் அறிவித்துள்ளார். இந்தியாவில் தற்போது கொரோனா வைரஸ் இரண்டாவது அலை கட்டுப்படுத்தப்பட்டு தினசரி பாதிப்பு மற்றும் உயிரிழப்பு குறைந்து வருகிறது.

இதைத் தொடர்ந்து இந்தியாவுக்கான பயணக் கட்டுப்பாடுகளை இங்கிலாந்து தளர்த்தியுள்ளது. இதன்படி இந்தியாவில் இருந்து திரும்பும் தடுப்பூசி முழுமையாகப் போட்ட இங்கிலாந்து குடிமக்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டியதில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இந்தியாவில் இருந்து இங்கிலாந்துக்குச் செல்லும் விமான சேவையை பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமான நிறுவனம் 10இல் இருந்து 20 ஆக அதிகரித்துள்ளது. இந்த நடைமுறை இந்த வாரத்தில் இருந்து அமலுக்கு வருகிறது.

இதனால் இந்தியாவின் டெல்லி, மும்பை, பெங்களூரு மற்றும் ஹைதராபாத் உள்ளிட்ட நகரங்களில் இருந்து இங்கிலாந்தின் லண்டன், ஹீத்ரோ ஆகிய நகரங்களுக்கு நேரடி விமான சேவை இயக்கப்படும் என்று தெரிகிறது.

-ராஜ்

முதன்முறையாக திருச்செந்தூர் கோயிலுக்குள் புகுந்த மழைநீர்! ...

2 நிமிட வாசிப்பு

முதன்முறையாக திருச்செந்தூர் கோயிலுக்குள் புகுந்த மழைநீர்!

ஓடும் ரயிலில் சாகசம்: எஸ்.பி அட்வைஸ்!

3 நிமிட வாசிப்பு

ஓடும் ரயிலில் சாகசம்: எஸ்.பி அட்வைஸ்!

புதிய ஆட்சியரின் வாக்குறுதி!

3 நிமிட வாசிப்பு

புதிய ஆட்சியரின் வாக்குறுதி!

வியாழன் 19 ஆக 2021