மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 19 ஆக 2021

ஒன்றிய அரசை எச்சரிக்கும் தமிழ்நாடு வணிகர் சங்கம்!

ஒன்றிய அரசை எச்சரிக்கும் தமிழ்நாடு வணிகர் சங்கம்!

பெட்ரோல், டீசல் விலையை குறைக்காவிட்டால் ஒன்றிய அரசை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என வணிகர் சங்கங்களின் கூட்டமைப்பு எச்சரித்துள்ளது.

கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கொரோனா காரணமாக பொருளாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல், ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரமும் முடங்கியுள்ளது. ஆனால், இந்த ஊரடங்கு காலத்திலும் அத்தியாவசிய பொருட்களின் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டு வருவதால், என்ன செய்வதென்று மக்கள் விழிபிதுங்கி கொண்டிருக்கின்றனர். தமிழ்நாடு உள்பட பல மாநிலங்களில் பெட்ரோல் டீசல் விலை 100ஐ தாண்டி விற்பனை செய்யப்பட்டு வந்தது. சமீபத்தில் தமிழ்நாடு சட்டப்பேரவையில் பெட்ரோல் மீதான வரியை 3 ரூபாய் வரை குறைத்து அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதையடுத்து பெட்ரோல் விலை இரட்டை இலக்கத்தில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதற்கிடையில் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை மேலும் ரூ.25 அதிகரித்து ஒரு சிலிண்டர் விலை ரூ.925(சிலிண்டர் டெலிவரி உள்பட) ஆக உயர்ந்துள்ளது. இப்படி தொடர்ந்து பொருட்களின் விலை உயர்வால் மக்கள் என்ன செய்வதென்று தெரியாமல் கலக்கத்தில் உள்ளனர்.

தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களிலும் பெட்ரோல், டீசல் மற்றும் சிலிண்டர் விலையை குறைக்கக் கோரி போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இதுகுறித்து சமீபத்தில் பேசிய ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், “விலை உயர்வால் மக்களின் கவலை ஏற்புடையதே. ஆனால், கடந்த காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்தில் எண்ணெய் பத்திரங்கள் வாங்கியதில் நிறைய கடன் பாக்கி இருக்கிறது, அதை செலுத்துவதற்கு காலக்கெடு தேவைப்படுவதால் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான விலையை குறைக்க முடியாது” என்று திட்டவட்டமாக கூறினார்.

இந்நிலையில், பெட்ரோல், டீசல் விலையை குறைக்காவிட்டால், தமிழ்நாடு முழுவதும் ஒன்றிய அரசை கண்டித்து போராட்டம் நடத்தப்படும் என வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

-வினிதா

அனுமதியின்றி மண் எடுத்துக் கொள்ளலாம்!

3 நிமிட வாசிப்பு

அனுமதியின்றி மண் எடுத்துக் கொள்ளலாம்!

தவறான முடி திருத்தம் - ரூ.2 கோடி இழப்பீடு: தேசிய நுகர்வோர் குறை ...

11 நிமிட வாசிப்பு

தவறான முடி திருத்தம் - ரூ.2 கோடி இழப்பீடு: தேசிய நுகர்வோர் குறை தீர்ப்பு ஆணையத்தின் அதிரடி!

திங்கள்கிழமை தடுப்பூசி போடப்படாது: செயலாளர் ராதாகிருஷ்ணன் ...

4 நிமிட வாசிப்பு

திங்கள்கிழமை தடுப்பூசி போடப்படாது: செயலாளர் ராதாகிருஷ்ணன்

வியாழன் 19 ஆக 2021