மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 19 ஆக 2021

ஆங்கில எழுத்துக்களால் ஆன அண்ணா ஓவியம்!

ஆங்கில எழுத்துக்களால் ஆன அண்ணா ஓவியம்!

முன்னாள் முதல்வர் அண்ணாதுரையின் படத்தை ஆங்கில எழுத்துக்களைப் பயன்படுத்தி வரைந்து கல்லூரி மாணவி உலக சாதனை படைத்துள்ளார்.

நாகை மாவட்டம், ஆயக்காரன்புலம் கிராமத்தைச் சேர்ந்த சுதி என்பவர் அங்குள்ள தனியார் கலைக் கல்லூரியில் கணினி இரண்டாமாண்டு பட்டப்படிப்பு படித்து வருகிறார். தற்போது அவருக்கு ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்று வருகின்றது. ஆன்லைன் வகுப்பை முடித்துவிட்டு, மீதமிருக்கும் நேரங்களில் ஓவியம் வரையும் பழக்கத்தைக் கொண்டவர் சுதி.

அந்த வகையில் தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் C.N Annadurai (சி.என்.அண்ணாதுரை) என்கிற ஆங்கில எழுத்துகளை 704 முறை பயன்படுத்தி, அண்ணாவின் உருவப்படத்தை தத்ரூபமாக வரைந்துள்ளார். 45 நிமிடம் 59 விநாடிகளில் வரைந்து முடித்துள்ளார் சுதி.

சுதியின் ஓவியத்தை பாராட்டிய, ’ஜாக்கி புக் ஆஃப் வேர்ல்டு ரெக்கார்டு’ ((JACKHI BOOK OF WORLD RECORDS) அமைப்பினர், அதனை உலகச் சாதனையாக அறிவித்து, அவருக்கு சான்றிதழும் விருதும் வழங்கினர்.

இதுபோன்று பல தலைவர்களையும் தத்ரூபமாக வரைந்துள்ளார் சுதி. தற்போது இவருக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

-வினிதா

திருப்பதி: அனைத்து பக்தர்களுக்கும் இலவச தரிசன டோக்கன்கள்!

2 நிமிட வாசிப்பு

திருப்பதி: அனைத்து பக்தர்களுக்கும் இலவச தரிசன டோக்கன்கள்!

உரியவரிடம் சேர்ந்த ஓணம் பம்பர் பரிசு ரூ.12 கோடி!

6 நிமிட வாசிப்பு

உரியவரிடம் சேர்ந்த ஓணம் பம்பர் பரிசு ரூ.12 கோடி!

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

3 நிமிட வாசிப்பு

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

வியாழன் 19 ஆக 2021