மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 19 ஆக 2021

கிச்சன் கீர்த்தனா: பாஸ்தா தோசை

கிச்சன் கீர்த்தனா: பாஸ்தா தோசை

கி.பி 920 வாக்கில் கன்னடத்தில் ஷிவகோடியாசார்யா என்பவர் எழுதியதிலிருந்து, இன்று நாம் விரும்பி சாப்பிடும் தோசை, கர்நாடக மாநிலக் கண்டுபிடிப்பு என்பதை அறிய முடிகிறது. மசாலா தோசையும் கர்நாடகா வரவுதான். இது துளுவ மங்களூர் பகுதியிலிருந்து உலகெங்கும் பரவியது. அந்த வகையில் தற்போது பலராலும் விரும்பப்படுகிறது இந்த பாஸ்தா தோசை. இதை நீங்களும் வீட்டிலேயே செய்து சுவைக்கலாம்.

என்ன தேவை?

சிறுதானிய தோசை மாவு - 2 கரண்டி

வேகவைத்த பாஸ்தா - 60 கிராம்

பெரிய வெங்காயம் (நறுக்கியது) - 20 கிராம்

மயோனைஸ் - 2 டீஸ்பூன்

ஃப்ரெஷ் க்ரீம் - 100 மில்லி

பீட்சா சாஸ் - அரை டீஸ்பூன்

சீஸ் - 20 கிராம்

வெண்ணெய் - ஒரு டீஸ்பூன்

ரெட் சட்னி - அரை கரண்டி

எப்படிச் செய்வது?

தோசைக்கல்லில் 2 கரண்டி தோசை மாவை ஊற்றி மெல்லியதாகத் தேய்த்துக்கொள்ளவும். பின்னர் தோசையின் மேல் வெண்ணெய் சேர்த்து, அது உருகிய உடன் நறுக்கிவைத்த வெங்காயத்தைப் போடவும். அதைத் தொடர்ந்து மயோனைஸ், பீட்சா சாஸ், வேகவைத்த பாஸ்தாவைப் போடவும். பாஸ்தா மேல் ஃப்ரெஷ் க்ரீம் மற்றும் ரெட் சட்னி போட்டுக் கிளறி, தோசையின் மேல் சீஸை துருவி விட்டு, அடுப்பிலிருந்து எடுத்து தட்டில்வைத்தால், சுவையான பாஸ்தா தோசை தயார்.

சிறுதானிய தோசை மாவு தயாரிக்க...

கேரள சிவப்பரிசியை தேவையான அளவு எடுத்து மாவாக அரைத்துக்கொள்ள வேண்டும். சிறுதானிய வகைகளையும் மாவாக அரைத்து இரண்டையும் சரிபாதி விகிதத்தில் எடுத்து பாத்திரத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி தேவையான அளவு உப்பு போட்டு, தோசைக்கு மாவுக் கரைசலைத் தயார் செய்துகொள்ள வேண்டும்.

மாவு அரைப்பது சிரமமாகத் தோன்றினால் சிவப்பரிசி மாவும் சிறுதானிய வகைகள் மாவும் இரண்டுமே கடைகளில் கிடைக்கின்றன. அவற்றை வாங்கி உப்பு, தண்ணீர் சேர்த்து தயார் செய்யலாம். இரவு தோசை ஊற்றப்போவதாக இருந்தால் காலையிலேயே மாவுக் கரைசலை தயார் செய்து வைத்துக்கொள்ள வேண்டும் அப்போதுதான் புளிப்புத் தன்மை ஏற்பட்டு, தோசையின் சுவை பிரமாதமாக இருக்கும்.

ரெட் சட்னி தயாரிக்க...

கடாயில் சிறிதளவு எண்ணெய்விட்டு சூடான வுடன் தேவையான அளவு பட்டை, லவங்கம் மற்றும் ஏலக்காயைச் சேர்த்து நன்கு வதக்கவும். பின் நறுக்கிவைத்த பெரிய வெங்காயத்தைச் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதங்கியதும் அதில் தக்காளியைச் சேர்த்து வதக்கவும். பிறகு சிறிதளவு வெல்லம் மற்றும் சுவைக்கேற்ப புளி சேர்த்து கிளறி இறுதியாக காய்ந்த மிளகாய் சேர்த்து நன்கு வதக்கி உப்பு சேர்த்து இறக்கினால் ரெட் சட்னி செய்வதற்கான மசாலா கலவை தயார். மிக்ஸியில் சட்னிக்குத் தேவையான அளவு பொட்டுக்கடலையைச் சேர்த்து அத்துடன் தயார் செய்துவைத்த மசாலா கலவையைக்கொட்டி அரைத்தெடுத்தால் வகை வகையான தோசைகளுடன் சேர்க்கும் ரெட் சட்னி தயார்.

நேற்றைய ரெசிப்பி: பனீர் ஃபேன்டஸி தோசை

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

3 நிமிட வாசிப்பு

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

காதலிக்கு போன்: கிணற்றில் விழுந்து தவித்த இளைஞர்!

4 நிமிட வாசிப்பு

காதலிக்கு போன்: கிணற்றில் விழுந்து  தவித்த இளைஞர்!

வியாழன் 19 ஆக 2021