மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 18 ஆக 2021

பூஸ்டர் டோஸ்: மருத்துவர் அறிவுறுத்தல்!

பூஸ்டர் டோஸ்: மருத்துவர் அறிவுறுத்தல்!

வெளிநாடுகளில் கொரோனா தொற்றுக்கு பூஸ்டர் டோஸ் வழங்குவது தொடர்பாக ஏழு வெவ்வேறு தடுப்பூசிகள் சோதனை செய்வதை கைவிடுமாறு உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளதாக தேசிய நுண்கிருமி நிறுவனத்தின் (என்ஐவி) இயக்குநர் டாக்டர் பிரியா ஆப்ரஹாம் கூறியுள்ளார்.

கொரோனா தொற்றுக்கு வெளிநாடுகளில் இரண்டாவது டோஸூக்கு பின்னரும் பூஸ்டர் டோஸ் என்று மூன்றாவது டோஸ் செலுத்தப்படுகிறது. இதுகுறித்து சீரம் நிறுவனத்தின் தலைவர் சைரஸ் பூனாவல்லா சமீபத்தில் கூறியிருந்தார். கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் போட்டுக் கொண்டாலும் சிறிது காலத்திற்கு பின்னர் உடலில் ஆன்டிபாடிகள் குறைந்துவிடுகின்றன. அதனால் பூஸ்டர் டோஸ் போட்டுக் கொள்வது அவசியம்.நானும் செலுத்திக் கொண்டேன் என்று கூறியிருந்தார்.

இதுகுறித்து புனேவில் உள்ள இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் தேசிய நுண்கிருமி நிறுவனத்தின் (என்ஐவி) இயக்குநர் டாக்டர் பிரியா ஆப்ரஹாம் கூறுகையில், ”வெளிநாடுகளில் கொரோனா தொற்றுக்கு பூஸ்டர் டோஸ் வழங்குவது தொடர்பாக குறைந்தபட்சம் ஏழு வெவ்வேறு தடுப்பூசிகள் சோதனை செய்யப்பட்டு வருகின்றன.

ஆனால் அதிக வருவாய் மற்றும் குறைந்த வருவாய் பெறும் நாடுகளிடையே தடுப்பூசி செலுத்துவதில் அதிக இடைவெளி உள்ளது. அதனால் பூஸ்டர் டோஸ் சோதனை முயற்சியை உலக சுகாதார அமைப்பு இந்த முயற்சிகளை கைவிடுமாறு கேட்டுக்கொண்டுள்ளது. இருப்பினும், எதிர்காலத்தில் பூஸ்டர் டோஸ்களுக்கான பரிந்துரைகள் கண்டிப்பாக முன்வைக்கப்படும்.

இரண்டு வெவ்வேறு தடுப்பூசிகளை செலுத்தும் சோதனைகள் நடைபெறுகின்றன. தேசிய நுண்கிருமி நிறுவனத்தில் இது போன்ற மாதிரிகளை நாங்கள் பரிசோதித்ததில் வெவ்வேறு தடுப்பூசிகளை போட்டுக் கொண்ட நோயாளிகள் பாதுகாப்பாக உள்ளனர்.

அவர்களுக்கு எந்தவிதமான தீவிர பாதிப்பும் தென்படவில்லை. அதுமட்டுமில்லாமல், அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியும் சிறப்பாகவே இருந்தது. ஒரு சில நாட்களில் இந்த ஆய்வு பற்றிய கூடுதல் விவரங்களைத் தெரிவிப்போம்.

2-18 வயது வரையிலான குழந்தைகளுக்கான கோவாக்சின் தடுப்பூசியின் சோதனை 2 மற்றும் 3ஆம் கட்ட நிலைகளில் இருக்கிறது. அதன் முடிவுகள் கிடைக்க பெற்றவுடன், அது கட்டுப்பாட்டாளர்களிடம் சமர்ப்பிக்கப்படும். அதைத் தொடர்ந்து செப்டம்பர் மாதத்தில் குழந்தைகளுக்கான தடுப்பூசி செயல்பாட்டுக்கு வரும்.

புதிய வகை தொற்றுகள் தொடர்ந்து வந்துகொண்டேதான் இருக்கும். ஆனால், முறையாக முகக் கவசம் அணிதல், தடுப்பூசி போடுதல் ஆகிய இரண்டு ஆயுதங்களை வைத்து தப்பித்துக் கொள்ள முடியும்”என்று கூறினார்.

-வினிதா

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - தினமும் மட்டன், முட்டை சாப்பிடலாமா? ...

5 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - தினமும் மட்டன், முட்டை சாப்பிடலாமா?

சேலைகளைத் துவைக்க உத்தரவு: நீதிபதிக்குத் தடை!

3 நிமிட வாசிப்பு

சேலைகளைத் துவைக்க உத்தரவு: நீதிபதிக்குத் தடை!

சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு பிரதமர் மோடி பாராட்டு!

3 நிமிட வாசிப்பு

சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு பிரதமர் மோடி பாராட்டு!

புதன் 18 ஆக 2021