மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 18 ஆக 2021

இந்து அறநிலையத் துறை சட்டத்தை ரத்து செய்ய கோரிய வழக்கு ஒத்திவைப்பு!

இந்து அறநிலையத் துறை சட்டத்தை ரத்து செய்ய கோரிய வழக்கு ஒத்திவைப்பு!

இந்து சமய அறநிலையத் துறை சட்டத்தை ரத்து செய்யக்கோரிய வழக்கில் விசாரணையை ஆறு வாரங்களுக்குத் தள்ளி வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த கே.எஸ்.குருமூர்த்தி, அர்ஜுனன் இளையராஜா ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்தனர். அதில், இந்து, இஸ்லாம், கிறிஸ்துவம் போன்ற மதங்கள் இருந்தாலும், மசூதிகள், தேவாலயங்களை முறைப்படுத்த அரசு எவ்வித அக்கறையும் காட்டாத நிலையில், இந்துக்கள் வழிபடும் கோயில்களைக் கட்டுப்படுத்த மட்டும் அறநிலையத் துறை சட்டத்தைக் கொண்டுவந்துள்ளது. கோயில் நிலங்கள் ஆக்கிரமிப்பு, இந்து கோயில்களை முறைப்படுத்துவதற்கும், கட்டுப்படுத்துவதற்கும் அறநிலையத் துறை சட்டம் கொண்டுவந்த நோக்கம் மாறி, கோயில்களை அரசின் கட்டுப்பாட்டில் எடுத்துக்கொள்வதாக குற்றஞ்சாட்டினர்.

அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் கோயில் இருந்தாலும், கோயில் நிலங்கள் ஆக்கிரமிக்கப்படுவதும், நிதி முறைகேடு நடப்பதும், தவறாகப் பயன்படுத்தப்படுவதும் தொடர்கதையாக இருக்கிறது. மேலும், மதச்சார்பற்ற நாடு என்று சொல்லுகின்ற நிலையில் இந்து சமயக் கோயில்களில் மீது மட்டும் ஆதிக்கம் செலுத்துவது என்பது அரசியல் சட்டத்திற்கு முரணானது. அறநிலையத் துறை சட்டத்தின் மூலம் கோயில்களை நிர்வகிப்பதில் எவ்வித தடையும் இல்லை. ஆனால், கோயில்களை முழுமையாகக் கட்டுப்பாட்டில் எடுத்துக்கொள்வது என்பது அனுமதிக்க முடியாது என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மனு நேற்று (ஆகஸ்ட் 17) தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் டி.பாஸ்கர் என்பவரும், அரசு தரப்பில் பி.முத்துக்குமார் என்பவரும் ஆஜராகினர். இந்த வழக்கு குறித்த ஆவணங்களை அரசுத் தரப்புக்கு வழங்க மனுதாரருக்கு அறிவுறுத்திய நீதிபதிகள், வழக்கு விசாரணையை ஆறு வாரங்களுக்குத் தள்ளி வைத்து உத்தரவிட்டனர்.

-வினிதா

டாஸ்மாக் கடைகளின் முன்பு விலைப்பட்டியல்!

4 நிமிட வாசிப்பு

டாஸ்மாக் கடைகளின் முன்பு விலைப்பட்டியல்!

தமிழகத்தின் ஓலா தொழிற்சாலையில் 10,000 பெண் ஊழியர்கள்!

5 நிமிட வாசிப்பு

தமிழகத்தின் ஓலா தொழிற்சாலையில் 10,000 பெண் ஊழியர்கள்!

சென்னை கோடம்பாக்கம் - ஆற்காடு சாலை: இன்று முதல் ஓராண்டுக்குப் ...

3 நிமிட வாசிப்பு

சென்னை கோடம்பாக்கம் - ஆற்காடு சாலை: இன்று முதல் ஓராண்டுக்குப் போக்குவரத்து மாற்றம்!

புதன் 18 ஆக 2021