மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 17 ஆக 2021

திருப்பதி: விரைவில் இயற்கை வேளாண் உணவு பொருட்கள் விற்பனை!

திருப்பதி: விரைவில் இயற்கை வேளாண் உணவு பொருட்கள் விற்பனை!

‘திருப்பதி தேவஸ்தானம் சார்பில் இயற்கை வேளாண்மை பொருட்கள் கொண்டு உணவு தயார் செய்யப்பட்டு பக்தர்களுக்கு லாப நோக்கம் இல்லாமல் விரைவில் விற்பனை செய்யப்படும்’ என்று கூடுதல் செயல் அதிகாரி தர்மா தெரிவித்துள்ளார்.

திருமலையில் உள்ள கூடுதல் செயலர் அதிகாரி அலுவலகத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழா கூட்டத்தில் பேசிய கூடுதல் செயல் அதிகாரி தர்மா, “சுவாமி நைவேத்தியத்துக்கு அரிசி, பருப்பு, வெல்லம் உள்ளிட்டவை இயற்கை வேளாண் பொருட்களை கொண்டும், நாட்டு மாடுகளின் நெய் பயன்படுத்தி நெய்வேத்தியம் சமர்ப்பிக்கப்பட்டு வருகிறது.

வரும் கிருஷ்ண ஜெயந்தி முதல் நவநீத சேவை திட்டம் தொடங்கப்பட்டு நாட்டு மாடுகளின் நெய் பக்தர்களிடம் நன்கொடை பெறும் திட்டமும் தொடங்கப்பட உள்ளது. அன்னதான திட்டத்தில் புதிதாக ஒரு திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

அதில் ‘சம்பிரதாய போஜனம்’ என்ற பெயரில் இயற்கை வேளாண் பொருட்களை கொண்டு தேவஸ்தானம் சார்பில் நான்கு இடங்களில் கேன்டீன் தொடங்கப்பட உள்ளது. இந்தத் திட்டம் 15 முதல் 30 நாட்களுக்குள் தொடங்கப்படும். வழக்கம்போல் வழங்கக்கூடிய அன்னதானமும் வழங்கப்படும்” என்று கூறினார்.

மேலும், ‘‘அலிபிரியில் இருந்து திருமலைக்கு நடந்து வரும் மலைப்பாதை புனரமைக்கும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது. செப்டம்பர் 31ஆம் தேதிக்குள் இந்தப் பணிகளை முடித்து பக்தர்களை அனுமதிக்க திட்டமிட்டுள்ளோம். திருமலையில் அனுமான் பிறந்த இடமாக அறிவிக்கப்பட்டுள்ள ஆகாச கங்கை தீர்த்தம் அருகே பால அனுமன் சுவாமி சந்நிதி அமைத்து அங்கு ஐந்து நாட்கள் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது’’ என்றும் கூடுதல் செயல் அதிகாரி தெரிவித்தார்.

திருமலையில் தற்போது பக்தர்களின் வசதிக்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் வாடகை அறை, தரிசன டிக்கெட் பெறுவது ஆகியவற்றை தேவஸ்தானம் எளிதாக்கியுள்ளது. நிபந்தனைகளைப் பின்பற்றி பக்தர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

-ராஜ்

ஃபேஸ்புக் பெயர் மாறும் காரணம்?

5 நிமிட வாசிப்பு

ஃபேஸ்புக் பெயர் மாறும் காரணம்?

பேருந்தில் படிக்கட்டு வழியாக கீழே விழுந்த பெண் பலி!

3 நிமிட வாசிப்பு

பேருந்தில் படிக்கட்டு வழியாக கீழே விழுந்த பெண் பலி!

ஐஸ்கிரீமில் மதுபானம் கலந்து விற்பனை: கடைக்கு சீல்!

2 நிமிட வாசிப்பு

ஐஸ்கிரீமில் மதுபானம் கலந்து விற்பனை: கடைக்கு சீல்!

செவ்வாய் 17 ஆக 2021