மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 17 ஆக 2021

ஒரு வாரத்துக்குள் மாற்று சான்றிதழ்!

ஒரு வாரத்துக்குள் மாற்று சான்றிதழ்!

பள்ளிகளில் மாணவர்களுக்கு ஒரு வாரத்திற்குள் மாற்று சான்றிதழ் வழங்கப்படுவதை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் உறுதி செய்ய பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

கொரோனா தொற்று காரணமாக பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. ஆன்லைன் வகுப்பின்போதும் சில தனியார் பள்ளிகள் முழு கல்விக் கட்டணத்தை வசூலிப்பதாக பெற்றோர்கள் புகார் தெரிவித்தனர். இதுதொடர்பான வழக்கில், தனியார் பள்ளிகள் 85 சதவிகித கட்டணத்தை ஆறு தவணைகளாக வசூலிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

கொரோனா சூழலால் இந்த முறையிலும் கட்டணத்தை கட்ட முடியாத மாணவர்கள் அரசு பள்ளிகளில் சேர்ந்து வருகின்றனர். கல்வி கட்டணம் செலுத்தாததால், ஆன்லைன் வகுப்பில் பங்கேற்க அனுமதி மறுப்பதுடன், மாற்று சான்றிதழையும் வழங்க சில பள்ளிகள் மறுப்பு தெரிவித்து வருவதாக கூறப்படுகிறது.

இதனால் மாற்று சான்றிதழ் இல்லாமலே மாணவர்களை அரசு பள்ளிகளில் சேர்த்து கொள்ள பள்ளிக் கல்வித் துறை அனுமதி வழங்கியது.

இதுகுறித்து பள்ளிக் கல்வி துறை ஆணையர் நந்தகுமார் முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், “மாற்று சான்றிதழ் இல்லாமலே மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் சேர்ந்ததை எதிர்த்து, தனியார் பள்ளிகள் சங்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

அந்த வழக்கில், வேறு பள்ளிக்கு மாறுதலாகி செல்ல விரும்பும் மாணவர்கள், தற்போது பயிலும் பள்ளியில் மாற்றுச் சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்தால் ஒரு வாரத்துக்குள் மாற்று சான்றிதழ் வழங்க வேண்டும்.

கல்வி கட்டணம் செலுத்தவில்லை என்பதற்காக மாற்று சான்றிதழ் வழங்க மறுக்கும் பள்ளிகள் மீது கல்வி அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். கட்டணம் உள்ளிட்ட எந்த பிரச்சினையாக இருந்தாலும், சம்பந்தப்பட்ட பள்ளிகள் சட்டப்படி தீர்வு காணவேண்டும்.

மாற்று சான்றிதழ் வழங்க மறுக்கும் பள்ளிகளுக்கு எதிராக பெற்றோர் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டால், இந்த நீதிமன்றம் தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கை

விசாரணைக்கு எடுக்கும்.

இதுகுறித்து இரண்டு வாரங்களுக்குள் பள்ளிக் கல்வித் துறை ஆணையர் இந்த விவரங்களை அனைத்துப் பள்ளிகளுக்கும் அளிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

எனவே நீதிமன்ற உத்தரவை அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் தங்களின் எல்லைக்குள் உள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும் தெரிவிக்க வேண்டும். ஒரு வாரத்திற்குள் மாற்று சான்றிதழ் வழங்கப்படுவதை உறுதியும் செய்ய வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

-வினிதா

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - தினமும் மட்டன், முட்டை சாப்பிடலாமா? ...

5 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - தினமும் மட்டன், முட்டை சாப்பிடலாமா?

சேலைகளைத் துவைக்க உத்தரவு: நீதிபதிக்குத் தடை!

3 நிமிட வாசிப்பு

சேலைகளைத் துவைக்க உத்தரவு: நீதிபதிக்குத் தடை!

சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு பிரதமர் மோடி பாராட்டு!

3 நிமிட வாசிப்பு

சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு பிரதமர் மோடி பாராட்டு!

செவ்வாய் 17 ஆக 2021