மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 17 ஆக 2021

பார்வையாளர்களுக்கு அனுமதி : சிறையில் குவிந்த குடும்பத்தினர்!

பார்வையாளர்களுக்கு அனுமதி : சிறையில் குவிந்த குடும்பத்தினர்!

சிறைகளில் மீண்டும் பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டதையடுத்து, நேற்று ஒரே நாளில் 180 சிறைக் கைதிகளை பார்வையாளர்கள் நேரிடையாக சந்தித்து பேசியதாக சிறைத்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமாக இருந்தபோது கட்டுப்பாடுகளும் கடுமையாக்கப்பட்டு வந்தன. அந்த சூழலில் சிறையில் கைதிகளை பார்க்க அவர்களது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு கடந்த ஏப்ரல் மாதம் முதல் தடை விதிக்கப்பட்டிருந்தது. இருப்பினும், மாற்று ஏற்பாடாக சிறைகளில் ஆன்ட்ராய்டு செல்போன்கள் வழங்கப்பட்டு, வீடியோ கால் மூலமாக தங்களது குடும்பத்தினர்களிடம் சிறைக் கைதிகள் பேசும் வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டன.

தற்போது கொரோனா பரவல் குறைந்து வருவதால், சிறைக் கைதிகளை நேரில் சந்திக்க அனுமதி வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.

அதனடிப்படையில் சிறைத்துறை நிர்வாகம் கடந்த ஆகஸ்ட் 16ஆம் தேதி முதல் கொரோனா விதிமுறைகளை பின்பற்றி பார்வையாளர்கள் சிறைக் கைதிகளை நேரடியாக சென்று பார்க்க அனுமதி வழங்கியது.

சிறைக் கைதிகளை சந்திக்க வரும் உறவினர்கள் கொரோனா தடுப்பூசி சான்றிதழ் அல்லது 72 மணி நேரத்துக்குள் எடுக்கப்பட்ட கொரோனா சான்றிதழ் வைத்திருக்க வேண்டும். சனி, ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்களை தவிர மற்ற நாட்களில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை 15 நிமிடங்கள் மட்டுமே சந்தித்து பேச அனுமதி. அதற்கு அரை மணி நேரத்துக்கு முன்னதாகவே சிறைக்கு வந்துவிட வேண்டும். ஒரு கைதிக்கு இரண்டு பார்வையாளர்கள் மட்டுமே அனுமதி உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டன.

இதையடுத்து நேற்று (ஆகஸ்ட் 16) மத்திய சிறைகள், கிளை சிறைகள், மாவட்ட சிறைகள் என அனைத்து சிறைகளிலும் சிறைக் கைதிகளை அவர்களது குடும்பத்தினர் நேரில் சந்தித்து பேசினர்.

அந்த வகையில் ஒரே நாளில் 174 ஆண்கள், ஆறு பெண்கள் என மொத்தம் 180 சிறை கைதிகளை அவர்களது வழக்கறிஞர்கள், உறவினர்கள், நண்பர்கள் உள்ளிட்டோர் நேரில் சந்தித்து பேசியதாக சிறைத்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

-வினிதா

ஃபேஸ்புக் பெயர் மாறும் காரணம்?

5 நிமிட வாசிப்பு

ஃபேஸ்புக் பெயர் மாறும் காரணம்?

பேருந்தில் படிக்கட்டு வழியாக கீழே விழுந்த பெண் பலி!

3 நிமிட வாசிப்பு

பேருந்தில் படிக்கட்டு வழியாக கீழே விழுந்த பெண் பலி!

ஐஸ்கிரீமில் மதுபானம் கலந்து விற்பனை: கடைக்கு சீல்!

2 நிமிட வாசிப்பு

ஐஸ்கிரீமில் மதுபானம் கலந்து விற்பனை: கடைக்கு சீல்!

செவ்வாய் 17 ஆக 2021