மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 17 ஆக 2021

சென்னையில் 49 இடங்களில் இலவச வை-பை!

சென்னையில் 49 இடங்களில் இலவச வை-பை!

சென்னையில் 49 இடங்களில் வை-பை வசதியை 30 நிமிடங்களுக்கு இலவசமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

இன்றைய காலக்கட்டத்தில் செல்போன் பயன்படுத்தாத நபர்களை பார்ப்பது அரிதாக உள்ளது. அந்தளவுக்கு செல்போன் பயன்பாடு அதிகரித்துள்ளது. ஒருநாளுக்கு 4ஜிபி டேட்டா கொடுத்தாலும், அதையும் தீர்க்கும் அளவுக்கு செல்போனிலேயே மூழ்கி கிடக்கின்றனர் இன்றைய இளைஞர்கள். இந்த சூழ்நிலையில் இலவச வை-பை கிடைக்கிறது என்றால் வேண்டாம் என்று சொல்வார்களா என்ன? ஆம், சென்னையில் 49 இடங்களில் இலவச வை-பை சேவை உள்ளது.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி இன்று(ஆகஸ்ட் 17) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “பெருநகர சென்னை மாநகராட்சியில் சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ் பல்வேறு விதமான திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதன் சிறப்பு அம்சமாக சென்னை மாநகரில் பல்வேறு இடங்களில் 49 எண்ணிக்கையிலான ஸ்மார்ட் கம்பங்கள் நிறுவப்பட்டுள்ளன. இந்த ஸ்மார்ட் கம்பங்களில் உள்ள வை-பையை பொதுமக்கள் 30 நிமிடங்களுக்கு இலவசமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம். பொதுமக்கள் தங்கள் கைப்பேசியில் வை-பை சென்று அதில் உள்ள இலவச வை-பை என்பதை தேர்வு செய்து அதில் செல்போன் எண்ணை பதிவு செய்து ஓகே கொடுத்தால், அடுத்து போனுக்கு ஓடிபி வரும், அந்த ஓடிபியை உள்ளீடு செய்து இலவச வை-பையை பயன்படுத்திக் கொள்ளலாம்.

சென்னையில் ஸ்மார்ட் கம்பங்கள் உள்ள இடங்கள் குறித்து மாநகராட்சி இணையதளத்தின்மூலம் அறிந்து கொள்ளலாம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

-வினிதா

‘பள்ளிக்கு போங்க தம்பி’: கரூர் மாவட்ட ஆட்சியர்!

2 நிமிட வாசிப்பு

‘பள்ளிக்கு போங்க தம்பி’: கரூர் மாவட்ட ஆட்சியர்!

குவைத்தில் வீட்டு வேலை: பெண்கள் விண்ணப்பிக்கலாம்!

4 நிமிட வாசிப்பு

குவைத்தில் வீட்டு வேலை: பெண்கள் விண்ணப்பிக்கலாம்!

கண்டித்த ஆசிரியையை கன்னத்தில் அறைந்த மாணவர்!

3 நிமிட வாசிப்பு

கண்டித்த ஆசிரியையை கன்னத்தில் அறைந்த மாணவர்!

செவ்வாய் 17 ஆக 2021